பொழுதுபோக்கு
ஜெயிலில் இருக்கும் கோமாளி, மன்னிப்பு கேட்க சென்ற ராஜூக்கு கிடைத்த ஷாக்; அது யார் தெரியுமா?
ஜெயிலில் இருக்கும் கோமாளி, மன்னிப்பு கேட்க சென்ற ராஜூக்கு கிடைத்த ஷாக்; அது யார் தெரியுமா?
தமிழ்த் தொலைக்காட்சியில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் தொடங்கி, தற்போது ஆறாவது சீசன் வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி, சமையல் மற்றும் நகைச்சுவையை ஒருங்கே கலந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. எனினும், மணிமேகலை – பிரியங்கா விவகாரம் போன்ற அவ்வப்போது நிகழும் சர்ச்சைகளுக்கும் இது விதிவிலக்கல்ல.இந்நிலையில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மேடையில் வெளியான ஒரு தகவல் அதன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தகவலை வெளியிட்டவர், அந்த சீசனின் போட்டியாளரும், டைட்டில் வின்னருமான ராஜு தான். சமீபத்தில் நடைபெற்ற ‘குக் வித் கோமாளி’ சீசன் 6 இறுதிப் போட்டியில், லட்சுமி ராமகிருஷ்ணன், உமைர், ஷபானா ஆகியோருடன் ராஜுவும் இறுதிச் சுற்றுக்கு வந்து, இறுதியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.இந்த சீசனில், போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கும்போது வெளிநாட்டினர் சிலர் இடையூறு செய்வதற்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். அப்போது, அந்த வெளிநாட்டினர் ஒருவரை ராஜு கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. ராஜுவின் இந்தச் செயல் உருவக்கேலி என்று நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இறுதி எபிசோடின் மேடையில் ராஜு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:- “நான் ஒரு வெளிநாட்டு நபரை கேலி செய்ததாகப் பலர் என்னைத் திட்டியிருந்தனர். அதனால், அந்த நபரைச் சந்தித்து மன்னிப்பு கேட்கலாம் என்று தேடினேன். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.””நான் விசாரித்ததில், அந்த வெளிநாட்டினரை ஜெயிலில் அடைத்துவிட்டதாகத் தெரிய வந்தது. அவர் வேலைக்காக இந்தியாவிற்கு வந்திருந்தாலும், முறையான அனுமதி (visa or work permit) இல்லாமல் இருந்ததால், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாராம்.” ராஜு மேடையிலேயே தெரிவித்த இந்தச் செய்தி, ‘குக் வித் கோமாளி’ பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இடையே பெரும் பேசுபொருளாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளரானார் ராஜு. அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்ற சீசனில் அவர்தான் வெற்றியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
