Connect with us

சினிமா

கோடிகளில் புரளும் தெலுங்கு நடிகைகள்!! நம்பர் 1 பணக்கார நடிகை இவர்தான்..

Published

on

Loading

கோடிகளில் புரளும் தெலுங்கு நடிகைகள்!! நம்பர் 1 பணக்கார நடிகை இவர்தான்..

இந்திய சினிமாவில் நடிக்க்கும் நடிகைகளின் மார்க்கெட்டுக்கு ஏற்பட்ட அவர்களின் சம்பளம் அதிகரித்து கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து வைத்திருப்பார்கள். அப்படி தற்போதைய காலக்கட்டத்தில் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் நடிகைகளின் சொத்து மதிப்பு எவ்வளவு, யார் டாப் 1 இடத்தில் இருக்கிறார் என்று பார்ப்போம்..தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா, டாப் 10 பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 38 கோடியாம். ஒரு படத்திற்கு 60 லட்சம் முதல் 90 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறாராம்.நடிகை ரகுல் ப்ரீத் சிங், ரூ. 40 கோடி சொத்து மதிப்பு வைத்து 9வது இடத்தில் இருக்கிறார்.நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரின் சொத்து சுமார் ரூ. 45 கோடி இருக்குமாம்.தென்னிந்திய சினிமாவில் சென்ஷேஷ்னல் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சாய் பல்லவி, தெலுங்கிலும் தனக்கான ஒரு இடத்தினை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 47 கோடியாம்.தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் ரூ. 50 கோடிக்கும் சொத்து வைத்துள்ளார்.தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, 60 கோடி சொத்து வைத்துள்ளாராம்.நேஷ்னல் கிரஷ் என்று புகழப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, சுமார் ரூ. 66 கோடி சொத்து வைத்துள்ளார்.தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சமந்தா, பாலிவுட்டிலும் கால் பதித்து தனக்கான ஒரு இடத்தினை பிடித்துவிட்டார். அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 100 கோடி வரை இருக்குமாம்.நடிகை தமன்னா ஒரு ஐட்டம் பாடலுக்கே 6 கோடி சம்பளமாக பெற்று வருகிறார். அவரின் சொத்துமதிப்பு சுமார் ரூ. 110 கோடி இருக்குமாம்.தெலுங்கு திரைத்துறையின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி தான் டாப் 1 பணக்கார நடிகையாக திகழ்கிறார். அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 130 கோடிக்கும் மேல் இருக்குமாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன