Connect with us

சினிமா

2 வாழ்க்கை வாழ்வதை நிறுத்திவிட்டேன்!! நடிகை சமந்தா எமோஷனல் பதிவு..

Published

on

Loading

2 வாழ்க்கை வாழ்வதை நிறுத்திவிட்டேன்!! நடிகை சமந்தா எமோஷனல் பதிவு..

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.அவ்வப்போது, போட்டோஸ் வெளியிடும் நடிகை சமந்தா, தன்னைப்பற்றியும், 20 களில் இருந்த பாதுகாப்பு இல்லாத நிலை, உணர்வில் இருந்து 30 களில் கிடைத்த அமைதி மற்றும் உன்மைத்தன்மைக்கு மாறியது குறித்தும் மனம் திறந்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.அதில், முப்பதுகளுக்கு பின் எல்லாம் வீழ்ச்சிதான் என்று உலகம் உங்களுக்கு சொல்கிறது. உங்கள் பொலிவு மங்கிவிடும், உங்கள் அழகு நீங்கிவிடும், நேரம் முடிந்துவிடும். இருப்பதுகளில் எல்லாவற்றையும் சாதிக்க அவசரப்பட வேண்டும், சரியான முக, சரியான உடல், சரியான வாழ்க்கை என்று உங்களை விரட்டுகிறது. என்னுடைய இருபதுகள் சத்தமானதாகவும் அமைதியற்றதாகவும் இருந்தது. நான் அவசரத்துடன் கடந்து வந்தேன்.போதுமானளவு அழகாகத்தெரிய, போதுமானதாக உணர, போதுமானதாக இருக்க அவசரப்பட்டேன். நான் உள்ளுக்குள் எவ்வளவு தொலைந்து போனதாக உணர்ந்தேன் என்பதை யாரும் பார்க்கக்கூடாது என்று அந்த வெளித்தோற்றத்தை தக்க வைக்க அவசரப்படேன். நான் ஏற்கனவே முழுமையானவள் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை.நான் யார் என்பதை மாற்றிக்கொள்ளாமல் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே உண்மையான அன்பு என்னைத்தேடி வரும் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. பின் என் 30 தான் வந்து, ஏதோ ஒன்று மென்மையாயிற்று, ஏதோ ஒன்று திறந்தது. பழைய தவறுகளின் பாரத்தை நான் இழுத்துச்செல்வதை நிறுத்துவிட்டேன்.மற்றவர்களுடன் ஒத்துப்போக முயல்வதை நிறுத்திவிட்டேன். இரண்டு வாழ்க்கையை வாழ்வதை நிறுத்திவிட்டேன். இன்று நான் உலகிற்கு காட்டியது, மற்றொன்று நான் அமைதியாக வாழ்ந்தது.ஓடுவதை நிறுத்திவிட்டு, இறுதியாக நான் வீடு திரும்பும் போது வரும் அமைதியை நான் அவளுக்கு( பழைய சமந்தாவுக்கு) தருவேன். ஏனென்றால் நீங்கள் முழுமையாக நீங்களாக இருக்கும்போது மன்னிப்பு கேட்காமல் வேடமிடு நடிக்காமல் உங்களை மட்டும் விடுவிக்கவில்லை. நீங்கள் உலகம் முழுவதையும் விடுவிக்கிறீர்கள் என்று சம்ந்தா அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன