இலங்கை
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
