இலங்கை
மண்ணெண்ணெய் விலை குறைப்பு.!
மண்ணெண்ணெய் விலை குறைப்பு.!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் பெற்றோல், டீசல் என்பவற்றின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது மாதாந்திர விலைத் திருத்தத்தை நேற்று அறிவித்துள்ளது. 92 ஒக்ரேன் பெற்றோல் விலையில் மாற்றங்கள் இல்லாத போதிலும், 95 ஒக்ரேன் பெற்றோல் விலை 6ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 95 ஒக்ரேன் பெற்றோலின் புதிய விலையாக 335 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 277 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசலின் விலை மாற்றமின்றி நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 180 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
