இலங்கை
சிறுமி மீது வன்புணர்வு; குற்றவாளிக்குக் கடூழியம்!
சிறுமி மீது வன்புணர்வு; குற்றவாளிக்குக் கடூழியம்!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 2015ஆம் ஆண்டு 14 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்குக் நீதிமன்றம் 10 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
கடந்த 10 வருடங்களாக இடம்பெற்ற இந்த வழக்கு, கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நேற்றுத் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, குற்றஞ்சாட்டப்பட்ட நபரை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பிட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றம் கட்ட ளையிட்டது.
