இலங்கை
இலங்கையின் நிதி நிலை முற்றாகச் சீரடையவில்லை; நாணய நிதியம் அறிக்கை!
இலங்கையின் நிதி நிலை முற்றாகச் சீரடையவில்லை; நாணய நிதியம் அறிக்கை!
இலங்கையின் நிதி நிலைமை முற்றாகச் சீரடையவில்லை எனினும் நம்பிக்கையை இலங்கை மீட்டெடுத்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் நிதிநிலைமை தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் சிறப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையிலேயே இலங்கையின் நிதி நிலைமை மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய தேவையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு செப்ரெம்பரில் இலங்கை உள்நாட்டுக்கடன் மறுசீரமைப்பில் ஈடுபட்டது. இது இலங்கையின் நிதி நிலையில் இருந்த உடனடி அழுத்தங்களைப் போக்குவதற்கு உதவியது. ஆனால், இலங்கை தொடர்ச்சியான நிதி ஒழுக்கத்தைப் பேணுவது அவசியமாகவுள்ளது என்றும் நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
புதியகடன் ஒப்பந்தங்களில் இலங்கை கையெழுத்திடுவதற்கு முன்னர் செலவு மற்றும் அபாய பகுப்பாய்வு அவசியம். புதிய கடன் திட்டங்கள் நாட்டின் பொதுவான இலக்குகளுடன் ஒத்துப்போக வேண்டும். அதிக வரிவிகிதங்கள், பிழையான கொள்கைகள், நிலையற்ற சந்தை போன்ற காரணிகளின் கலவையால் தான் இலங்கையில் கடன் நெருக்கடி ஏற்பட்டது என்று நாணயநிதியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
