பொழுதுபோக்கு
என்னோட புதுக் குழந்தை… சுவாரசியம் பகிரும் மாடல் நமிதா மாரிமுத்து!
என்னோட புதுக் குழந்தை… சுவாரசியம் பகிரும் மாடல் நமிதா மாரிமுத்து!
திருநங்கை சமூகத்துக்குள் இருந்து வெளிச்சமாக எதிரொலித்த நமீதா மரிமுத்து, தன் வாழ்க்கையை மாற்றிய மாபெரும் பயணத்தின் மூலம் இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தவர். 2011ம் ஆண்டு பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது தனது பாலின அடையாளத்தை உணர்ந்து, சமூக எதிர்ப்புகளால் வீட்டை விட்டு வெளியேறிய நமீதா, கல்வியை தொடர முடியாத சூழலிலும் மாடலிங் உலகில் புகழை பிடித்தெடுத்தார்.பல போராட்டங்களுக்கும் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு பெற்றோரின் அன்பையும் ஏற்றுக்கொள்ளலையும் பெற்றதற்குப் பின்னால் ஒரு போராளியின் உயிரின் துடிப்பு உள்ளது. தற்போது, மிஸ் இந்தியா திருநங்கை பிரிவில் நாட்டை பிரதிநிதித்துவம் செய்ததுடன், ஸ்பெயினில் நடைபெற்ற மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2020 உள்ளிட்ட பல விருதுகளையும் வென்று, தன்னம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறார்.கடந்த 2011ம் ஆண்டு பொறியியல் 3ம் ஆண்டு படிக்கும் போது, பாலின மாற்றத்தை உணர்ந்து வீட்டில் இருந்து வெளியேறினார் நமீதா. இதனால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை என்றபோதும், மாடலிங் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அறுவைச் சிகிச்சை முடிந்து தன் வாழ்க்கையில் பல போராட்டங்களுக்குப் பிறகே, தனது பெற்றோர் தன்னை ஏற்றுக் கொண்டதாக நமீதா குறிப்பிட்டுள்ளார். திருநங்கைகளுக்காக நடத்தப்படும் ஃபேஷன் ஷோவில் மிஸ் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய நமீதா, ஸ்பெயினில் நடந்த மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2020 விருது போன்றவற்றை வென்றுள்ளார்.மாடலிங் மட்டுமின்றி சினிமாவிலும் நடித்துள்ளார் நமீதா. சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்துள்ள நமீதா, பாடலொன்றும் பாடியிருக்கிறார்.விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமல் அறிமுகம் செய்து வைத்த போட்டியாளர்களில் மக்களை அதிகம் ஆச்சர்யப்படுத்தியவர் திருநங்கை நமீதா மாரிமுத்து. தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளர் அவர் தான். நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக சுவாரஸ்யமான ஆளுமையாக அறிமுகப்படுத்தப்பட்டார் நமீதா.அவர் தற்போது ஒரு லேட்டஸ்ட் வீடியோவில் தனது குழந்தை போல நினைக்கும் அவரது காரை பற்றி பேசியிருந்தார். அதை பற்றி அவர் பேசுகையில்,”எனக்கு இதை வாங்கியது மிகவும் சந்தோஷத்தை தந்தது. நான் அமேஸ் கார் 10 வருதத்திற்கும் மேலாக வைத்திருந்தேன். அதை இதுக்கு மேல் பயனப்டுத்த முடியாத நிலைமையில் தான் இந்த புது காரை வாங்கினேன். இது என்னுடைய குழந்தை மாதிரி. எனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது.” என்று பகிர்ந்துகொண்டார்.
