இலங்கை
யாழில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்!
யாழில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்!
சர்வதேச ரீதியாக இன்றையதினம் சிறுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது மாணவர்களது பல்வேறு கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. அத்துடன் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம் ஒன்றும் மாணவர்களால் ஆற்றப்பட்டது. இறுதியாக “மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்காற்றுவது பெற்றோர்களா? ஆசிரியர்களா?” என்ற தலைப்பில் ஆசிரியர்களால் பட்டிமன்றம் ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.
இதில் கல்லூரியின் பதில் அதிபர் மயூரன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
