இலங்கை
வசீம் தாஜூதின் மரணத்தை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம்: நாமல்
வசீம் தாஜூதின் மரணத்தை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம்: நாமல்
வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடக பிரிவு புதிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ராஜபக்ஷர்கள் இந்த அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கமும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட பொய்களை உண்மையாக்குவதற்கு முயற்சித்தார்கள்.
வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் நாராஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை கைது செய்து போலியான வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கும் கடந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் முயற்சித்தார்கள். அந்த அதிகாரிகள் தான் இந்த அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
