இலங்கை
எரிவாயு விலை; மாற்றம் இல்லை!!
எரிவாயு விலை; மாற்றம் இல்லை!!
எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒக்ரோபர் மாதத்துக்கான எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு, லாப் எரிவாயு நிறுவனத்தால் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, ஒக்ரோபர் மாதத்துக்கான லாப் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதுள்ளதைப் போன்று 4 ஆயிரத்து 100 ரூபாவாகவே எரிவாயு விலை பேணப்படவுள்ளது. இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலையிலும் மாற்றங்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
