இலங்கை
காற்றாலைக்கு எதிரான போர்; வழக்குத் தொடரப்பட்டோருக்கு நீதிமன்றம் வழங்கியது பிணை!
காற்றாலைக்கு எதிரான போர்; வழக்குத் தொடரப்பட்டோருக்கு நீதிமன்றம் வழங்கியது பிணை!
மன்னாரில் காற்றாலைக் கோபுரங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.
பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு மன்னாருக்குள் காற்றாலைக் கோபுரங்கள் அமைப்பதற்கான உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதற்கெதிராக பொதுமக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தபோது, பொலிஸார் தடியடி நடத்தியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்கும் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்காக வந்தபோதே, சந்தேகநபர்கள் ஆறு பேரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் செல்லுமாறு நீதிவான் அறிவுறுத்தினார். வழக்கு விசாரணைகள் மீண்டும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்படவுள்ளது.
