இலங்கை
விமானப்பயண முன்பதிவுக்கு டிஜிற்றல் வசதி!
விமானப்பயண முன்பதிவுக்கு டிஜிற்றல் வசதி!
யூனியன் பே (Union Pay) ஊடாகப்பணத்தைச் செலுத்தி விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் யூனியன் பே இன்டர்நேஷனல் மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்தப்புதிய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய முறைமை இணையவழிக்கட்டண முறைகளை விரிவுபடுத்துகிறது.
இது வளர்ந்துவரும் டிஜிற்றல் முறைமையை மேலும் பலப்படுத்துகிறது. இதனால் விமானப் பயணச்சீட்டுகளை இலகுவாக முன்பதிவு செய்து கொள்ளமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
