இலங்கை
பொலிகண்டியில் நேற்று படகொன்று தீக்கிரை; பொலிஸார் விசாரணை!
பொலிகண்டியில் நேற்று படகொன்று தீக்கிரை; பொலிஸார் விசாரணை!
வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடிப்பகுதியில் படகொன்றும், கடற்றொழில் உபகரணங்கள் சிலவும் நேற்றுத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. நேற்று நண்பகல் வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். சந்தேகநபர் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
