இலங்கை
வட்டு. இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வாணி விழா!
வட்டு. இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வாணி விழா!
நவராத்திரி விரதத்தின் வாணி விழா நிகழ்வு இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது.
ஆரம்பத்தில் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு தொடர்ந்து இறை வணக்கம் இடம்பெற்றது. பின்னர் மாணவர்களது கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. இறுதியாக “நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது, நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை குறைகிறது” என்ற தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற்றது.
கல்லூரியின் பதில் அதிபர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்த வாணி விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் அதிபர் வதனி தில்லைச்செல்வன் கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
