Connect with us

இந்தியா

சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது லஞ்சக் குற்றச்சாட்டு; இந்தியாவை விட்டு வெளியேறியது வின்ட்ராக் நிறுவனம்

Published

on

Wintrack inc 1

Loading

சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது லஞ்சக் குற்றச்சாட்டு; இந்தியாவை விட்டு வெளியேறியது வின்ட்ராக் நிறுவனம்

இந்த நிறுவனம் சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மத்திய நிதி அமைச்சகம் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டது.ஆங்கிலத்தில் படிக்க:வின்டிராக் நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “அக்டோபர் 1, 2025 முதல், எங்கள் நிறுவனம் இந்தியாவில் இறக்குமதி/ ஏற்றுமதி நடவடிக்கைகளை நிறுத்திவிடும். கடந்த 45 நாட்களாக, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் எங்களை இடைவிடாமல் துன்புறுத்தி வருகின்றனர்” என்று கூறியுள்ளது. “இந்த ஆண்டு இருமுறை அவர்களின் லஞ்சப் பழக்கங்களை நாங்கள் அம்பலப்படுத்தியதால், அவர்கள் பழிவாங்கி, எங்கள் செயல்பாடுகளை முடக்கி, இந்தியாவில் எங்கள் வணிகத்தை அழித்துவிட்டனர். இந்தச் சோதனையான காலங்களில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று குற்றம் சாட்டியுள்ளது.வின்டிராக் நிறுவனம் இப்போது தனது  ‘எக்ஸ்’ பயோவில்,  “சென்னை சுங்கத்துறையில் லஞ்சத்தை அம்பலப்படுத்தினோம், பழிவாங்கலைச் சந்தித்தோம். வணிகத்தை இழந்தோம். ஊழல் வெற்றி பெற்றது. அவர்கள் எங்கள் வணிகத்தை அழிக்கலாம், எங்கள் குரலை அல்ல” என்று குறிப்பிட்டுள்ளது.சென்னை சுங்கத்துறை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.சர்ச்சையின் மையத்தில் ‘தனிநபர் மசாஜ் கருவிகள்’இந்தச் சர்ச்சையின் மையமாக இருப்பது ஒரு சரக்கு ஏற்றுமதி ஆகும். பிரவின் கணேசனின் கருத்துப்படி, இது இந்தியாவில் மற்றும் உலக அளவில் பாலியல் ஆரோக்கியப் பொருட்களாக பரவலாக விற்கப்படும் தனிநபர் மசாஜ் கருவிகள் ஆகும். ஒரு பதிவில் அவர், “சர்ச்சைக்குரிய சரக்கு இந்த மசாஜ் கருவிதான்! ஒரு சார்ஜிங் கேபிள் இல்லாமல் ஒரு நிறுவனம் மசாஜ் கருவியை எப்படி விற்க முடியும்? புதிய தயாரிப்புக் கருவியில் சார்ஜிங் கேபிள் ஒரு பகுதியாக உள்ளது; ஒவ்வொரு புதிய தயாரிப்புக்கும் செயல்பட சார்ஜிங் கேபிள் தேவை. ஆனால், சுங்கத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு முதல் முறையாக, சார்ஜிங் கேபிள்களை ஏன் தனியாக அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்” என்று புகார் கூறினார்.யாரும் அத்தகைய கேபிள்களை தனியாக விற்க மாட்டார்கள் என்றும், அவை எப்போதும் பேக்கிங் பட்டியலில் ஒரு பகுதியாகவே இருந்ததாகவும் கணேசன் வாதிட்டார். முதன்முறையாக, அதிகாரிகள் இ.பி.ஆர் (EPR) மற்றும் எல்.எம்.பி.சி (LMPC) இணக்கச் சான்றிதழ்களையும் கோரியதாக அவர் குற்றம் சாட்டினார். இ.பி.ஆர் (EPR) (விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு – Extended Producer Responsibility) என்பது, இறக்குமதி செய்யப்படும் பொருளில் உள்ள பேட்டரிகளை மறுசுழற்சி செய்வதற்கான பொறுப்பை நிறுவனம் ஏற்கும் என்று தெரிவிக்கும் இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றிதழாகும். எல்.எம்.பி.சி என்பது, எடை மற்றும் லேபிள்கள் எவ்வாறு காட்டப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் சட்ட அளவியல் (பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள்) விதிகளாகும். இந்த இரண்டும் வழக்கமான நடைமுறைகள் என்றாலும், தனது சரக்குகளைத் தாமதப்படுத்தவும் தடுக்கவும் இவை தேர்ந்தெடுத்து ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன என்று பிரவின் கணேசன் குற்றம் சாட்டினார்.இந்த நிறுவனம் மேலும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி, ஒரு மூத்த அதிகாரியைப் பெயரிட்டு, அவர் “எங்களை வெளிப்படையாக மிரட்டினார்” என்று கூறியுள்ளது.சென்னை சுங்கத்துறை மறுப்புசென்னை சுங்கத்துறை வெளியிட்ட விரிவான மறுப்பு அறிக்கையில், இந்தக் குற்றச்சாட்டுகள் “தீவிரமானவை மற்றும் பொய்யானவை” என்று கூறி, “ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளை” முன்வைத்தது.தவறான வகைப்பாடு: ஆய்வின்போது, பொருட்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. “CTH 90191010-ன் கீழ் அறிவிக்கப்பட்ட பொருட்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டவை என்றும், அவை சரியாக CTH 90191020-ன் கீழ் வகைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கண்டறியப்பட்டது. இந்தத் தவறான வகைப்பாட்டை இறக்குமதியாளர் 01.09.2025 அன்று ஏற்றுக்கொண்டார்” என்று கூறியது.மறைக்கப்பட்ட சரக்கு: மேலும், எட்டு பெட்டிகள் யு.எஸ்.பி (USB) சார்ஜிங் கேபிள்கள் அறிவிக்கப்படவில்லை என்றும், இது சுங்கச் சட்டம், 1962-ன் பிரிவு 111-ஐ அப்பட்டமாக மீறுவதாகும் என்றும் சுங்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.இ.பி.ஆர் இணக்கமின்மை: இறக்குமதி செய்யப்பட்ட மசாஜ் கருவிகளில் உள்ளமைக்கப்பட்ட ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் இருப்பதால், பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள், 2022-ன் கீழ் இ.பி.ஆர் பதிவு கட்டாயம் என்று சுங்கத்துறை வலியுறுத்தியது. “மீண்டும் மீண்டும் கோரியும் இறக்குமதியாளர் சான்றிதழை வழங்கத் தவறினார். அதற்குப் பதிலாக, தவறான ஆவணங்களையும் (மின்-கழிவு ஆவணம்), சட்டப்படி ஏற்க முடியாத விலக்கு கோரிக்கைகளையும் (எம்.எஸ்.எம்.இ விலக்கு, முடிக்கப்பட்ட தயாரிப்பு விலக்கு, குறைந்த பேட்டரி திறன் விலக்கு போன்றவை) முன்வைத்தார் – இவற்றில் எதுவும் சட்டத்தில் இல்லை” என்று அறிக்கை கூறியது.அதிகாரிகளை மிரட்டுதல்: சுங்கத்துறை பிரவின் கணேசன் மீது மிரட்டல் குற்றச்சாட்டையும் கூறியது. “30.09.2025 அன்று நடந்த அதிகாரப்பூர்வ சந்திப்பின்போது, இறக்குமதியாளர் சரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டபோது, ஊடகத்தில் வெளியிடுதல் மற்றும் தற்கொலை மிரட்டல்கள் மூலம் மூத்த அதிகாரிகளை மிரட்ட முயன்றார்” என்று அது கூறியது. எந்தவிதமான லஞ்சமும் கோரப்படவில்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளும் “சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்டவை, நடைமுறைப்படி சரியானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட விதிமீறல்களின் அடிப்படையில் அமைந்தவை” என்றும் துறை வலியுறுத்தியது.மத்திய அமைப்பு தலையீடுநாடு முழுவதும் சுங்கத்துறையைக் கண்காணிக்கும் நிதி அமைச்சகத்தின் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சி.பி.ஐ.சி – CBIC), சமூக ஊடகங்களில் தலையிட்டது. “பிரவின் கணேசன் ட்விட்டரில் எழுப்பிய சென்னை சுங்கத்துறை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்த விவகாரம் இறக்குமதியாளரால் செய்யப்பட்ட தவறான அறிவிப்பு மற்றும் தவறான வகைப்பாடு தொடர்பானது என்று தெளிவுபடுத்தப்படுகிறது” என்று சி.பி.ஐ.சி கூறியுள்ளது.இந்த அதிகாரப்பூர்வ அறிக்கைகளுக்குப் பதிலளித்த பிரவின் கணேசன், மூன்று அதிகாரிகளைக் குறிப்பிட்டு, “இந்த அதிகாரிகள் கடந்த வாரம் எனது மனைவியின் நிறுவனத்தின் சரக்குகளை விடுவிக்க லஞ்சம் பெற்றனர். மும்பையில் உள்ள முகமற்ற மதிப்பீட்டு அதிகாரி ரூ. 50,000 பெற்றார். நாங்கள் நேரில் எங்கள் ஊழியர்கள் மூலம் லஞ்சம் குறித்துப் பேசியபோது… அவர்கள் 10% தள்ளுபடி வழங்கினர்” என்று குற்றம் சாட்டினார்.நிதி அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவுஇதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.“வின்டிராக் நிறுவனம் (சென்னை) எழுப்பிய விவகாரத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நியாயமான, வெளிப்படையான மற்றும் உண்மை அடிப்படையிலான விசாரணையை மேற்கொள்ள வருவாய்த் துறைக்கு (@FinMinIndia) உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரையும், அதிகாரிகளையும் விசாரித்து, அனைத்து தொடர்புடைய ஆவண ஆதாரங்களையும் முழுமையாக ஆராய ஒரு மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.“இந்த விவகாரம் அதிகபட்ச தீவிரத்துடன் கையாளப்படுகிறது, மேலும், சட்டத்தின்படி பொருத்தமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. வணிகம் செய்வதற்கான எளிமையை மேம்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடுமையான எதிர்வினைஅரசியல்வாதிகளும் இந்த விவாதத்தில் இணைந்தனர். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்,  “இது மிகவும் மனச்சோர்வை அளிக்கிறது. ஊழல் அமைப்பு முழுவதும் பரவி உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் ‘வியாபாரம் செய்வதற்கான விலை’ என்ற அடிப்படையில் இணங்கிச் செல்கின்றன. இது இப்படி இருக்க வேண்டியதில்லை. நாடு வளரவும் செழிக்கவும் வேண்டுமானால், நிச்சயமாக இப்படி இருக்கக் கூடாது” என்று எழுதினார்.பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இன்போசிஸின் முன்னாள் சி.எஃப்.ஓ மற்றும் வாரிய உறுப்பினருமான மோகன்தாஸ் பை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு, “மேடம்… இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறினார்.“நமது துறைமுகங்களில் உள்ள அமைப்பு ரீதியான ஊழலை உங்களால் அகற்ற முடியவில்லை. தயவுசெய்து இதை நிறுத்துங்கள். நீங்கள் எங்கள் நிதியமைச்சர், எங்கள் பிரதமர் நரேந்திர மோடி ஊழலற்ற ஆட்சியை எங்களுக்கு உறுதியளித்தார். நீங்கள் வரிப் பயங்கரவாதத்தையும் தடுக்கத் தவறிவிட்டீர்கள்” என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் குறியிட்டு பை எழுதினார்.சென்னை விமான மற்றும் துறைமுகச் சுங்கத்தின் கீழ் செயல்படும் முகவர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், இது ஒரு ஒற்றைச் சரக்கு தொடர்பான பிரச்னை மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் வணிகம் செய்வதில் உள்ள விரக்தி பற்றியது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தனர். “சாதாரண வர்த்தகர்களுக்கு, பி.ஐ.எஸ் (BIS), எல்.எம்.பி.சி (LMPC), இ.பி.ஆர் (EPR) போன்ற விதிகள் நாட்கள் அல்லது வாரங்கள் தாமதத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, அதே விதிகள் பாதுகாப்பு, நுகர்வோர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான கட்டாயப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகும். நாங்கள் திறமையின்மை அல்லது ஊழல் பிரச்சினையை எழுப்பினால், சட்டத்தைத் தவிர்க்க முயற்சிக்கும் விதிமீறல் செய்பவர்களாகச் சுங்கத்துறை எங்களைக் சித்தரிக்கும். துரதிர்ஷ்டவசமாக, ஒழுங்குமுறை விழிப்புணர்வுக்கும் துன்புறுத்தலுக்கும் இடையிலான கோடு பெரும்பாலும் மங்கலாக உள்ளது” என்று சென்னையில் உள்ள ஒரு மூத்த சுங்க இல்ல முகவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன