இலங்கை
குடும்ப சுகாதார பணியாளரின் வீட்டிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு!
குடும்ப சுகாதார பணியாளரின் வீட்டிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு!
மஹாவ, கொன்வேவ பகுதியிலுள்ள குடும்ப சுகாதார பணியாளர் ஒருவரின் வீட்டின் முன் நேற்று (02) ஒரு மாத பெண் சிசுவொன்று கைவிடப்பட்டுள்ளதாக மஹாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்ப சுகாதார பணியாளர் வீட்டின் முன் திறந்தவெளியில் ஒரு நாற்காலியில் குறித்த சிசு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மஹாவ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய, பொலிஸார் சிசுவை மீட்டு நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
