Connect with us

சினிமா

வீட்டை விட்டு வெளியேறும் மீனா- செந்தில்.. கவலையில் பாண்டியன் குடும்பம்.! டுடே எபிசொட்.!

Published

on

Loading

வீட்டை விட்டு வெளியேறும் மீனா- செந்தில்.. கவலையில் பாண்டியன் குடும்பம்.! டுடே எபிசொட்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் தனியா போய் இருக்கணும் என்று சொன்னதுக்கு கோமதி பேசிக்கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட செந்தில் என்னால இங்க வாழ முடியாது என்கிறார். பின் செந்தில் அவனுக்கு தோணுறத செய்யட்டும் என்று கோபமாக சொல்லுறார். இதனை அடுத்து கோமதி அதையே நினைத்து அழுதுகொண்டிருக்கிறார். அதைப் பார்த்த மீனா எனக்கும் செந்தில் எடுத்த முடிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்கிறார். பின் ராஜி மீனாவைப் பார்த்து உங்களுக்கு விருப்பம் இல்ல என்றால் செந்தில் கிட்ட போய் சொல்லுங்க என்கிறார். அதுக்கு மீனா நான் எவ்வளோ தடவை சொல்லிட்டேன் ஆனா செந்தில் கேக்கிறாரே இல்ல என்று சொல்லுறார். மறுபக்கம் செந்தில் அப்பாட்ட இருந்து தப்பிக்கிறதுக்காகவே இந்த வீட்டை விட்டுப் போகணும் என்கிறார்.மேலும் தயவு செய்து என்னை யாரும் தடுக்க வேணாம் என்கிறார். அதைத் தொடர்ந்து மீனா செந்திலைப் பார்த்து அத்தை அழுது கொண்டே இருக்காங்க.. இப்புடியா தனியா போற விஷயத்தை வீட்டில சொல்லுறது என்று கேட்க்கிறார். அப்புடியே ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பின் கோமதி அதையே நினைச்சுப் பார்த்து அழுதுகொண்டிருக்கிறார். மறுநாள் காலையில கதிர் அண்ணா எடுத்த முடிவு சரி தான் என்று சரவணன் கிட்ட சொல்லுறார். அப்ப பாண்டியன் கடைக்கு போய் வேலையை பார்க்கச் சொல்லி சரவணன் கிட்ட சொல்லுறார். அந்த நேரம் பார்த்து செந்தில் பாண்டியனைக் கூப்பிட்டு நாளைக்கே வீட்டை விட்டுப் போகப்போறேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன