சினிமா
தலைவர் பர்த்டே டபுள் ஸ்பெஷல்..! இணையத்தில் கசிந்தது ஜெயிலர்-2 புதிய அப்டேட்..!

தலைவர் பர்த்டே டபுள் ஸ்பெஷல்..! இணையத்தில் கசிந்தது ஜெயிலர்-2 புதிய அப்டேட்..!
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். இது 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் இதன் வெற்றி அடுத்த ஜெயிலர் பார்ட் 2 எடுப்பதற்கு தூண்டுதலாக அமைந்தது.இதற்கான அறிவிப்பும் வெளியானது. தற்போது இன்னுமொரு சூடான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. பழம்பெரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நடிப்பு வாழ்க்கையில் இன்றுவரையில் மிகவும் பிஸியாக இருக்கிறார், அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தனது முதல் படமான கூலி படத்தில் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்திய அப்டேட் படி ரஜினிகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாளின் சிறப்பு அறிவிப்பாக கூலி டீசர் வெளியாக இருக்கிறது. மேலும் முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜெயிலர் 2 ப்ரோமோ ஷூட் சென்னையில் நேற்று தொடங்கப்பட்டு இன்று நிறைவடைந்துள்ளது. 2023-ல் வெளியான பிளாக்பஸ்டரின் தொடர்ச்சியாக உருவாகும் ஜெயிலர் 2 ப்ரோமோ சூப்பர் ஸ்டார் ராஜனிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12 வெளியாக இருப்பதாக தற்போது தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இது ரஜனிகாந்த் ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட்டாக இருக்கும்.