இலங்கை
காற்றாலை வேண்டும்; மன்னாரில் போராட்டம்!
காற்றாலை வேண்டும்; மன்னாரில் போராட்டம்!
மன்னாரில் காற்றாலைத் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்தே இந்தப் போராட் டத்தை முன்னெடுத்தனர்.
காற்றாலை தொடர்பில் பொதுமக்களுக்கு உரிய தெளிவுபடுத்தலை வழங்கி இந்தத் திட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு கோரி, மன்னார் மாவட்டச் செயலரிடம் அவர்களால் மனுவொன்றும் வழங்கப்பட்டது.
