பொழுதுபோக்கு
ரஜினியின் கூலி படத்துக்கு டஃப் கொடுக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’… முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
ரஜினியின் கூலி படத்துக்கு டஃப் கொடுக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’… முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா’. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘காந்தாரா’ திரைபடம் கடந்த 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியான இப்படம் அடுத்ததாக அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ரூ.16 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.‘காந்தாரா’ திரைப்படம் முதலில் சீக்குவலாக வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் ப்ரீக்குவல் வெளியாகி உள்ளது. அதாவது ‘காந்தாரா சாப்டர் 1’ நேற்று (அக். 2) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலக அளவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் இந்தியாவில் 8800 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இதில், இந்தியில் 4700 காட்சிகள் 30 சதவிகித ரசிகர்கள் வருகையுடன் தொடங்கியுள்ளது.அதேபோன்று கன்னடாவில் 1500 காட்சிகள் 88 சதவிகித ரசிகர்கள் வருகையுடன் தொடங்கியுள்ளது. மேலும், தமிழில் 1000 காட்சிகளும் தெலுங்கில் 800 காட்சிகளும் மலையாளத்தில் 600 காட்சிகள் 70 சதவிகித ரசிகர்கள் வருகையுடன் தொடங்கியுள்ளது.’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் வசூல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ படத்தின் முதல் நாள் வசூலை கடந்ததாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படக் குழுவினர் வெளியிட்டது போன்று சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்று வைரலானது . அதில், ’காந்தாரா சாப்டர் 1’ படம் பார்க்க வரும் ரசிகர்கள் மது அருந்தவோ, புகைப்பிடிக்கவோ, அசைவம் சாப்பிடிருக்கவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
