வணிகம்
4 ஆண்டுகளில் 200% லாபம்: நிஃப்டியை முந்திய தங்கத்தின் அபார வளர்ச்சி- செய்கூலி, சேதாரம் இல்லாமல் வாங்க சூப்பர் ஐடியா
4 ஆண்டுகளில் 200% லாபம்: நிஃப்டியை முந்திய தங்கத்தின் அபார வளர்ச்சி- செய்கூலி, சேதாரம் இல்லாமல் வாங்க சூப்பர் ஐடியா
தங்கம்… நம் வீட்டுப் பெட்டகத்தின் நம்பிக்கை, நம் கலாச்சாரத்தின் அங்கம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மஞ்சள் உலோகம் நிதிச் சந்தையில் நிகழ்த்தியிருக்கும் ‘அதிரடி ஆட்டத்தை’ப் பல முதலீட்டாளர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். 2020 முதல் இன்றுவரை தங்கம் கிட்டத்தட்ட 200% அபாரமான வருமானத்தைக் குவித்துள்ளது. அமைதியான, ஆனால் சக்திவாய்ந்த இந்த வளர்ச்சி, உங்கள் முதலீட்டு இலாகா மற்றும் உங்கள் குடும்பச் சொத்துக்களுக்கு என்ன செய்திருக்கிறது?தங்கம் Vs நிஃப்டி: பொதுவாகவே, தங்கம் ஒரு “பாதுகாப்பான, ஆனால் மந்தமான” முதலீடு என்ற கருத்து நிலவுகிறது. பங்குச் சந்தையின் வேகத்துக்கும், கிரிப்டோவின் உற்சாகத்துக்கும் மத்தியில் தங்கம் ஒரு பழமையான சொத்தாக ஒதுக்கி வைக்கப்பட்டது. ஆனால், புள்ளிவிவரங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன:கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியப் பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50 ஐ விட தங்கம் (24% CAGR) சிறப்பான வருமானத்தை அளித்துள்ளது. பங்குகளைப் போலல்லாமல், இது எந்த ரிஸ்க்கும் இல்லாமல், கிட்டத்தட்ட இரட்டிப்பு லாபத்தை அளித்துள்ளது. பல முதலீட்டாளர்கள் ‘கரெக்ஷனுக்காகக்’ காத்திருக்க, தங்கம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. ஏற்றத்தை தூண்டிய நான்கு சக்திகள்!தங்கத்தின் இந்த நம்பமுடியாத எழுச்சிக்குப் பின்னால் ஒரு மர்மமும் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகள் முழுவதும் நிலவிய ‘நிச்சயமற்ற தன்மையின் பாடம்’ தான் இது. தங்கம் எப்போதுமே குழப்பமான காலங்களில் செழிக்கும்.பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: அன்றாடப் பொருட்களின் விலை ஏறியது. மேலும், உலகளவில் டாலரில் விலை நிர்ணயிக்கப்படுவதால், இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகச் சரிந்தபோதெல்லாம், இந்தியாவில் தங்கத்தின் விலையும் உயர்ந்தது. நம் ரூபாய் பலவீனமடையும்போது, தங்கம் உங்கள் வாங்கும் சக்தியைப் பாதுகாக்கிறது.உலகளாவிய குழப்பங்கள் (Safe-Haven Demand): கொரோனா, போர்ச் சூழல் மற்றும் விநியோகச் சங்கிலிச் சீர்குலைவுகள் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பிற்காக தங்கத்தை நோக்கித் தள்ளின. ஒவ்வொரு உலகளாவிய குழப்பமும், தங்கத்தை உலகிலேயே பழமையான காப்பீட்டு வடிவமாக உறுதிப்படுத்தியது.மத்திய வங்கிகளின் ரகசிய கொள்முதல்: உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் அமைதியாகத் தங்கத்தை வாங்கி தங்கள் இருப்பை அதிகப்படுத்தின. நிதி உலகின் மிக உயர்ந்த மட்டத்தில்கூட தங்கத்தின் மீதான நம்பிக்கையே இதற்குக் காரணம்.குறைந்த வட்டி விகிதங்கள்: கொரோனா காலத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டபோது, வங்கிகளின் வைப்புநிதிகளும், பங்குகளும் கவர்ச்சியற்றவையாகத் தெரிந்தன. அப்போது வட்டி வழங்காத தங்கம்கூட, ஒரு சிறந்த மதிப்புக் கிடங்காக (Store of Value) மாறிவிட்டது.இந்த நான்கு காரணிகளின் ஒருங்கிணைவு தங்கத்திற்குச் சாதகமான ஒரு அரிய சூழலை உருவாக்கியது.தங்கத்தின் வளர்ச்சியால் பலனடைந்த மூன்று பிரிவினர்தங்கத்தின் இந்த வளர்ச்சியால் இந்தியாவின் செல்வச் செழிப்பு மூன்று வெவ்வேறு கோணங்களில் மாறியுள்ளது.நகை வணிக நிறுவனங்கள்: நகை வணிக நிறுவனங்கள்: தங்கத்தின் அலை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை சமீபத்திய ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2025 வெளிப்படுத்துகிறது. ஜோய் ஆலுக்காஸ் போன்ற ஜாம்பவான்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்ததோடு, நகை வணிகத் துறை மட்டும் இந்த ஆண்டு 25 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது.இந்தியக் குடும்பங்கள்: உலகிலேயே அதிகத் தங்கத்தை தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் நம் இந்தியக் குடும்பங்களே மற்றொரு பெரிய பயனாளிகள். சுமார் 25,000 டன் தங்கம் இந்திய வீடுகளிலும், லாக்கர்களிலும் குவிந்துள்ளது. பாரம்பரியத்திற்காகச் சேர்த்து வைத்திருக்கும் நகைகள் மற்றும் நாணயங்கள் இப்போது இரட்டிப்பு மதிப்பைப் பெற்றுள்ளன. திருமணங்கள் அல்லது கடன் தேவைக்காக மதிப்பிடப்பட்டபோதுதான், பல குடும்பங்கள் இந்தச் சொத்துகளின் பிரம்மாண்டமான வளர்ச்சியை உணர்ந்தனர்.தனிப்பட்ட முதலீட்டாளர்கள்: நகைகள் வேண்டாம் என்று நினைக்கும் இளம் முதலீட்டாளர்கள், கோல்ட் இ.டி.எஃப் (Gold ETFs) மற்றும் சாவரின் கோல்ட் பாண்ட் (Sovereign Gold Bonds – SGB) போன்ற டிஜிட்டல் வடிவங்களைத் தேர்ந்தெடுத்தனர். இது சேமிப்புச் செலவுகளைக் குறைத்து, அதிக லாபத்தைப் பெற வழிவகுத்தது.உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவிற்கு தங்கம் சொல்லும் பாடம் என்ன?தங்கத்தின் இந்தச் சாதனை, நாம் ஏன் அதை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது என்பதை நிரூபிக்கிறது. இருப்பினும், உணர்ச்சிவசப்பட்டு அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.பல்வகைப்படுத்தல் (Diversifier) தான் முக்கியம்: நிதி ஆலோசகர்கள் உங்கள் மொத்த போர்ட்ஃபோலியோவில் 5% முதல் 10% வரை தங்கத்தை ஒதுக்கலாம் என்று பரிந்துரைக்கின்றனர். இது பங்குகளின் அபாயத்தைச் சமன் செய்ய உதவுகிறது. இதற்கு மேல் முதலீடு செய்தால், பங்குகள் மூலம் கிடைக்கும் கூட்டு வட்டி (Compounding) சக்தியை இழக்க நேரிடும்.எப்படி வாங்குகிறீர்கள் என்பது முக்கியம்: முதலீடுதான் உங்கள் நோக்கம் என்றால், நகைகள் வேண்டாம். ஏனெனில், அதில் செய்கூலி, சேதாரம் மற்றும் தூய்மைக் கவலைகள் அதிகம். நாணயங்கள், கோல்ட் இ.டி.எஃப் அல்லது சவரின் கோல்ட் பாண்ட்கள் சிறந்தவை. சவரின் கோல்ட் பாண்ட்களில் (SGB) வட்டி வருமானமும் கிடைக்கும்.நீண்ட கால நோக்கு அவசியம்: தங்கம் “பணப் புழக்கத்தை” (Cash flow) உருவாக்காது என்பதால், அதன் விலை சில காலங்களுக்கு ஒரே நிலையில் இருக்கக்கூடும். 2020-ல் ஏற்பட்ட திடீர் உயர்வுக்குப் பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அது அமைதியாகவே இருந்தது. எனவே, இதை ஒரு தந்திரமான வர்த்தகமாகப் பார்க்காமல், நீண்ட காலத்திற்கான ஒரு நிலையான ஒதுக்கீடாகக் (Steady Allocation) கருதுவது சிறந்தது.இறுதி எச்சரிக்கை!இப்போது நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டியது: உங்கள் செல்வத்தில் எவ்வளவு சதவீதம் தங்கத்தில் உள்ளது? அது சரியான வடிவத்தில் உள்ளதா? அது 5% க்கும் குறைவாக இருந்தால், இ.டி.எஃப் (ETFs) மூலம் சிறிது சிறிதாகச் சேர்க்கத் தொடங்குங்கள். அது 20% க்கும் அதிகமாக இருந்தால், நீங்கள் மற்ற வளர்ச்சி சொத்துக்களை இழக்கிறீர்களா என்று யோசித்து, சமநிலையைக் கொண்டு வாருங்கள்.தங்கம் ஏற்கனவே அதன் சக்தியை நிரூபித்துவிட்டது. அடுத்த முறை தங்கம் ஜொலிக்கும்போது, “நான் தவறவிட்டுவிட்டேனே” என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
