Connect with us

சினிமா

நீ ஆணா? பெண்ணா? பொண்ணுனா அத காட்டு.. அக்‌சய் குமார் மகளுக்கு நடந்த அதிர்ச்சி

Published

on

Loading

நீ ஆணா? பெண்ணா? பொண்ணுனா அத காட்டு.. அக்‌சய் குமார் மகளுக்கு நடந்த அதிர்ச்சி

1991 ஆம் ஆண்டு  வெளியான சவுகந்த் என்ற படத்தின் மூலம்  தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் அக்‌சய் குமார். இவர்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பலமொழிகளிலும் நடித்து வருகின்றார்.  ஒவ்வொரு படத்திற்கும் 60 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இவர், கிட்டத்தட்ட இதுவரையில் 150 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்த நிலையில்,  மும்பையில் நடைபெற்ற ‘சைபர்  விழிப்புணர்வு 2025’ ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்த அக்‌சய் குமார், தனது மகளுக்கு நடந்த துயர சம்பவம் பற்றி மனம் திறந்து உள்ளார். குறித்த நிகழ்ச்சியில் அவர் கூறுகையில்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மகள் ஸ்மார்ட் போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அவருடன் இன்னொருவர் ஏதோ ஒரு மூலையில் இருந்தபடி கேமில் பங்கேற்றார். அப்போது எனது மகளிடம் நீ எங்கிருந்து விளையாடுகிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு எனது மகள் நான் மும்பையில் இருக்கின்றேன் என்று கூறியுள்ளார். அதன் பின்பு  இருவரும் விளையாட்டை தொடர்ந்துள்ளனர். அப்போது அந்த நபர் எனது மகளிடம் நீ ஒரு ஆணா? இல்லை பெண்ணா? எனக் கேட்க, அதற்கு இவள் நான் ஒரு பெண் என்று பதில் அளித்துள்ளார். அவர் உடனே ஆபாச பதிவுகளை அனுப்பி உள்ளார். பின்பு உனது நிர்வாண புகைப்படத்தை காட்டு என கேட்டுள்ளார். இதை கண்டதும் அதிர்ந்து போனது மகள்  உடனடியாக ஃபோனை அணைத்துவிட்டு  தனது அம்மாவிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். எனவே சைபர் குற்றவாளிகளின் வலையில் குழந்தைகள் சிக்கிக் கொள்ளக் கூடாது என அக்‌சய் குமார் எச்சரித்துள்ளார்.  இது சாதாரண குற்றங்களை விட பெரியவை, அவற்றை தடுக்க வேண்டும்,  இது தொடர்பில் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட வேண்டும் என  அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன