Connect with us

பொழுதுபோக்கு

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயம் முடிந்ததா? இன்ஸ்டாவில் வந்த போட்டோ: நெட்டிசன்கள் ரியாக்ஷன்

Published

on

Rashmika mandhana eng

Loading

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயம் முடிந்ததா? இன்ஸ்டாவில் வந்த போட்டோ: நெட்டிசன்கள் ரியாக்ஷன்

இந்திய சினிமாவின் நேஷ்னல் க்ரஷ் என்று அழைக்கப்பட்ட ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து இருவருமே எந்த உறுதியான தகவலும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர்  விஜய் தேவரகொண்டா. அதேபோல் கன்னடம், தெலுங்கு, தமிழ் இந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தி வருபவர் ரஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்களில் இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த்து. அதேபோல் ரியல் லைஃபிலும் இவர்கள் காதலிப்பதாக தகவல்கள் பரவ தொடங்கி இன்றுவரை இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது.இதனிடையே தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், இந்த நிகழ்ச்சயில், இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஒரு தனிப்பட்ட விழாவாக நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமணம் வரும் 2026-ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.விஜய் மற்றும் ரஷ்மிகா இருவரும் தங்கள் உறவு நிலை குறித்துப் பொதுவெளியில் கருத்துத் தெரிவிக்காமல் இருந்தாலும், எம்9 நியூஸ் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, அவர்களின் நிச்சயதார்த்தம் அமைதியாக நடந்துள்ளது. இது, தனிப்பட்ட விஷயங்களைப் பொதுவெளி வெளிச்சத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் காரணமாக இந்த தகவல்கள் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.இந்த பரபரப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, ரஷ்மிகா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு தசரா (விஜயதசமி) பதிவு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அந்தப் பதிவில், ஒரு அழகான பாரம்பரிய புடவையில், நெற்றியில் குங்குமத்துடன் ராஷ்மிகா காணப்பட்டார். இந்தப் படங்கள் அவரது நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு யூகம் கிளம்பியது. இந்தப் பதிவு பண்டிகைக் கொண்டாட்டத்தை விட மேலானது என்று நம்பிய ரசிகர்கள், சில நிமிடங்களிலேயே அவரது கமென்ட் பகுதியை வாழ்த்துச் செய்திகளால் நிரப்பிவிட்டனர்.A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)ரஷ்மிகா ஆயுஷ்மான் குரானா, நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் ஆதித்யா சர்போதார் இயக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படமான ‘தம்மா’  படத்தின் ரிலீஸ்காக தயாராகி வருகிறார். இப்படம் அக்டோபர் 21, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. மேலும், கிருத்தி சனோனுடன் நடிக்கும் ‘காக்டெய்ல் 2’ படப்பிடிப்பையும் அவர் முடித்துவிட்டார். விஜய் தேவரகொண்டா கடைசியாக கௌதம் தின்னானூரி இயக்கிய ‘கிங்டம்’ (2025)-திரைப்படத்தில் நடித்திருந்தார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன