Connect with us

உலகம்

கனடாவில் இந்திய மாணவர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை!

Published

on

Loading

கனடாவில் இந்திய மாணவர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 06/12/2024 | Edited on 06/12/2024

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குராசிஸ் சிங் (22) என்பவர், கனடாவில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில்  வணிக மேலாண்மை துறையில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர், கனடாவில் உள்ள சர்னியா பகுதியில், கிராஸ்லி ஹண்டர் (36) என்பவரோடு அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் சமையலறையில் இருந்த போது இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிராஸ்லி ஹண்டர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குராசிஸ் சிங்கை சரமாரியாக பலமுறை குத்தினார். இதில் படுகாயமடைந்த குராசிஸ் சிங், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

Advertisement

இதனையடுத்து,  தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயிரிழந்த குராசிஸ் சிங்கின் உடலை மீட்டனர். மேலும், தனது அறை தோழரை கத்தியால் குத்தி கொலை செய்த கிராஸ்லி ஹண்டரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பாக, இந்தியா – கனடா உறவுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • புதிய சட்டங்களுக்கு இந்தி பெயர் திணிப்பு?; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

  • இதயம் தொடர்பான நோய்க்கு புதிய கண்டுபிடிப்பு; இனி மாரடைப்பை தடுக்கலாமா?

  • ஓடும் லாரியில் பாய்ந்த இளைஞர்; பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

  • “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

  • கனடாவில் இந்திய மாணவர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன