வணிகம்
மாதம் 30,000 சம்பாதிப்பவரா நீங்க? 50 லட்சம் சம்பளம் வாங்கும் சாஃப்ட்பேர் இஞ்சினியர் விட நீங்கதான் பணக்காரர் தெரியுமா?
மாதம் 30,000 சம்பாதிப்பவரா நீங்க? 50 லட்சம் சம்பளம் வாங்கும் சாஃப்ட்பேர் இஞ்சினியர் விட நீங்கதான் பணக்காரர் தெரியுமா?
“ஆண்டுக்கு 50 லட்சம் சம்பளம், பி.எம்.டபிள்யூ கார், குர்கானில் சொந்த வீடு, அடிக்கடி வெளிநாட்டுப் பயணம்” – கேட்கவே ஒரு வெற்றிக் கதை போல்தான் இருக்கிறது அல்லவா? ஆனால், இந்த “காகிதப் பணக்காரர்” பிம்பத்திற்குப் பின்னால், உண்மையில் ஒரு “திவால்” நிலை மறைந்திருக்கலாம் என்று அதிர்ச்சியூட்டுகிறார் செபி-யில் பதிவுசெய்யப்பட்ட ஆராய்ச்சி ஆய்வாளர் பிரியா ஜெயின். அவருடைய தினசரி அனுபவங்களிலிருந்து பெற்ற இந்தப் பாடம், அதிகச் சம்பளம் வாங்கும் பல இந்திய நிபுணர்கள் எதிர்கொள்ளும் கடன் பொறியின் அபாயத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.இன்ஸ்டாகிராம் வாழ்க்கை vs. வங்கிக் கணக்கு நிஜம்பிரபல சமூக வலைதளமான லிங்க்ட்இன் (LinkedIn) மூலம் பிரியா ஜெயின் பகிர்ந்த ஒரு பகுப்பாய்வில், ‘பிரியா’ என்ற புனைகதை பாத்திரத்தின் வாழ்க்கையை விவரிக்கிறார்.சாஃப்ட்வேர் இஞ்சினியர் பிரியா ஆண்டுக்கு 50 லட்சம் சம்பாதிக்கிறார். அவர் EMI-யில் வாங்கிய பி.எம்.டபிள்யூ கார் ஓட்டுகிறார், குர்கானில் 40 லட்சம் வீட்டுக் கடனுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருக்கிறார். துபாய் விடுமுறைப் பயணப் பதிவுகள், 10,000-க்கும் மேற்பட்ட லிங்க்ட்இன் ஃபாலோயர்கள் என அவருடைய ஆன்லைன் வாழ்க்கை பிரகாசமாக இருக்கிறது.ஆனால் அவருடைய நிஜ நிலை என்ன தெரியுமா? அவரிடம் மொத்தம் 60 லட்சம் கடன் இருக்கிறது, மாதாந்திர EMI மட்டும் $85,000 செலுத்த வேண்டியிருக்கிறது, மேலும் அவசரகால நிதி (Emergency Fund) எதுவும் இல்லை. ஒவ்வொரு மாதமும் கையில் கிடைக்கும் சம்பளம், கடனுக்கே சரியாகப் போய்விடுகிறது. ஜெயின் சொல்வதைப் போல, பிரியா ஒரு சாதாரண மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் கூட, திவால் ஆகும் அபாயத்தில் இருக்கிறார்.கடன் பொறிக்கு இட்டுச் செல்லும் கணக்கு50 லட்சம் ஆண்டுச் சம்பளத்தில், அனைத்து வரிகளும் போக, பிரியாவின் கைக்குக் கிடைக்கும் மாதச் சம்பளம் சுமார் 2.8 லட்சம். இதில், அவருடைய நிலையான மாதாந்திரச் செலவுகள் மலைக்க வைக்கின்றன:இ.எம்.ஐ (கார், வீடு): ₹85,000அடிப்படைச் செலவுகள் (உணவு, போக்குவரத்து): ₹50,000மொத்த செலவு: ₹1.35 லட்சம்கையில் மீதம் 1.45 லட்சம் மிஞ்சினாலும், இந்த ஆடம்பர வாழ்க்கைக்கான மறைமுகச் செலவுகள் (கார் பராமரிப்பு, இன்சூரன்ஸ், வீட்டுப் பராமரிப்பு, சமுதாயக் கட்டணங்கள்) இந்த மிச்சப் பணத்தையும் விழுங்கிவிடுகின்றன. இவற்றுடன் மருத்துவச் செலவுகள், குடும்ப அவசரங்கள், மற்றும் மேலும் ஆடம்பரமான வாழ்க்கைக்குத் தூண்டும் ‘லைப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்’ (Lifestyle Inflation) ஆகிய அனைத்தும் சேர்ந்து, பிரியாவின் மாதாந்திரச் சேமிப்பை பூஜ்யமாக்குகின்றன.அசல் செல்வம் என்பது நீங்கள் வைத்திருப்பதுதான்”உண்மையான செல்வம் என்பது நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதில் இல்லை. நீங்கள் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பதில் தான் உள்ளது,” என்று பிரியா ஜெயின் இறுதியாகக் கூறுகிறார்.ஒரு தனிநபரின் நிதி ஆரோக்கியம் என்பது அவருடைய சொத்துக்கள் மைனஸ் கடன்கள் (Assets−Liabilities) என்பதாகும். இந்த எண் எதிர்மறையாக (Negative) இருந்தால், அவருடைய சம்பளம் எவ்வளவு இருந்தாலும் அவர் நிதியியல் ரீதியாக திவாலானவரே.மாறாக, மாதத்திற்கு 30,000 சம்பாதிக்கும் ஒரு டெலிவரி ஊழியர், அதில் 15,000 தொடர்ந்து சேமித்தால், அவர் மாதம் 2.8 லட்சம் சம்பாதிக்கும் பிரியாவை விட நிதியியல் ரீதியாகப் பணக்காரர் தான் என்றும் ஜெயின் ஒப்பிடுகிறார்.ஆகவே, அதிகச் சம்பளம் வாங்கும் நிபுணர்கள், தங்கள் ஆடம்பரமான வாழ்க்கையைக் குறைத்துக்கொண்டு, செல்வத்தைக் கட்டியெழுப்புவதற்கு (Wealth Building) முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே ஆய்வாளரின் முக்கியப் பாடம். நீங்கள் வாங்கும் சம்பளம், உங்கள் கௌரவத்தை உயர்த்தும் கருவியாக இல்லாமல், உங்கள் நிதிச் சுதந்திரத்திற்கான படிக்கல்லாக இருக்கட்டும்.
