இலங்கை
யாழில் ஆசிரியரின் மூர்க்க குணத்தால் O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் வைத்தியசாலையில்
யாழில் ஆசிரியரின் மூர்க்க குணத்தால் O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் வைத்தியசாலையில்
யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதில் மாணவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மாணவனை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தாறுமாறாக தாக்கியதில் முகத்திலும், தலையிலும் காயங்களுக்குள்ளான நிலையில் மாணவன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் சில நாட்களாக பாடசாலை வராத காரணத்தினால் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு அனுமதிக்க முடியாதென ஆசிரியர் கூறியுள்ளார்.
பின்னர் குறித்த மாணவனை முழங்காலில் இருக்கவிட்டு தலையிலும், முகத்திலும் தாறுமாறாக தாக்கியுள்ள நிலையில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
