தொழில்நுட்பம்
புதிய ஃபயர் டிவி ஸ்டிக்கில் லினக்ஸ்: அதிநவீன ‘வேகா ஓ.எஸ்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அமேசான்
புதிய ஃபயர் டிவி ஸ்டிக்கில் லினக்ஸ்: அதிநவீன ‘வேகா ஓ.எஸ்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அமேசான்
அமேசானின் ஃபயர் டிவி தயாரிப்புகள் இதுவரை ஃபயர் ஓஎஸ் எனப்படும் இயங்குதளத்தில் இயங்கி வந்தன. இந்த ஃபயர் ஓஎஸ், ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் ப்ரொஜெட் (Android Open Source Project – AOSP) அடிப்படையாகக் கொண்டது ஆகும். ஆனால், அமேசான் நிறுவனம் விரைவில், தான் சொந்தமாக உருவாக்கிய வேகா ஓஎஸ் (Vega OS) என்ற புதிய இயங்குதளத்தில் இயங்கும் ஃபயர் டிவிகளை அறிமுகப்படுத்தும் என்று கடந்த சில மாதங்களாகவே வதந்திகள் பரவி வந்தன.தற்போது, அமேசான் நிறுவனம் வலைப்பதிவு மூலம் வேகா ஓஎஸ்-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஓ.எஸ். குறித்த விரிவான விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இது “விரைவான செயல்பாடுடையது மற்றும் அதிக செயல்திறன் கொண்டது” (responsive and highly efficient) என்று தெரிவித்துள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஃபயர் ஓஎஸ்-ஐப் போலல்லாமல், வேகா ஓ.எஸ்-இன் மையமாக ஆண்ட்ராய்டு இல்லை. மாறாக, இது லினக்ஸ் (Linux) அடிப்படையிலானது மற்றும் பிரபல ஜாவாஸ்கிரிப்ட் கட்டமைப்பான ரியாக்ட் நேட்டிவ் (React Native) பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஆப் உருவாக்குபவர்களுக்கு புதிய அப்ளிகேஷன்களை உருவாக்குவதை எளிதாக்குகிறது. இருப்பினும், புதிய இயங்குதளத்திற்காகச் செயலி உருவாக்குபவர்களை (App Developers) ஈர்க்கும் போராட்டத்தில் அமேசான் இன்னும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.வேகா ஓ.எஸ்ஸுடன் வெளிவரும் முதல் சாதனம், கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபயர் டிவி ஸ்டிக் 4K செலெக்ட் (Fire TV Stick 4K Select) ஆகும். இந்த புதிய ஸ்ட்ரீமிங் ஸ்டிக் 4K ஆதரவு மற்றும் HDR10+ ஆதரவுடன் வருகிறது. மேலும், அமேசான் ஒரு புதிய கிளவுட் ஆப் திட்டத்தையும் (Cloud App program) அறிமுகப்படுத்தியுள்ளது. இது, டெவலப்பர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு செயலிகளை புதிய வேகா ஓஎஸ்-க்கு மாற்றுவதை (Port) எளிதாக்குகிறது. இந்த கிளவுட் ஸ்ட்ரீமிங் சேவைக்கான செலவை 9 மாதங்களுக்கு அமேசானே ஏற்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஃபயர் ஓஎஸ்-ஐப் போலல்லாமல், வேகா ஓஎஸ்ஸால் செயலிகளை வெளியில் இருந்து நிறுவும் (sideloading) வசதி இல்லை. பயனர்கள் அமேசான் ஆப்ஸ்டோர் (Amazon Appstore)-இல் இருந்து மட்டுமே செயலிகளை நிறுவ முடியும். அதே சமயம், எக்ஸ்பாக்ஸ் கேமிங் (Xbox Gaming) மற்றும் லூனா (Luna) போன்ற பிரபலமான கேம் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான ஆதரவை வழங்குவதாகவும் அமேசான் உறுதியளித்துள்ளது. அமேசான் நிறுவனம் புதிய தயாரிப்புகளை வேகா ஓஎஸ்ஸுடன் வெளியிட்டாலும், ஆண்ட்ராய்டு இயங்கும் பழைய ஃபயர் ஓஎஸ் சாதனங்களுக்கான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
