Connect with us

பொழுதுபோக்கு

கிச்சன் சிங்க்-கில் கெட்ட வாடை… காபி தூளுடன் இத சேர்த்து துடைச்சுப் பாருங்க!

Published

on

singh 1

Loading

கிச்சன் சிங்க்-கில் கெட்ட வாடை… காபி தூளுடன் இத சேர்த்து துடைச்சுப் பாருங்க!

முன்பு வீடுகளில் சிங் என்று ஒன்று இருக்காது, இதனால் பெரும்பாலும் வீட்டு இல்லத் தரசிகள் தங்கள் வீட்டின் பின்புறத்தில் தான் காய்கறிகள், இறைச்சிகள் போன்றவற்றை சுத்தம் செய்வார்கள். அந்த கழிவுகளை காக்கா, பூனை போன்றவை உணவிற்காக எடுத்துச் செல்லும் இல்லையென்றால் அவை நேரடியாக கழிவு நீர் கால்வாயில் சென்று விடுவதால் பெரும்பாலும் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருந்தது.இதில் பெரும் பிரச்சனை என்னவென்றால் மழைக்காலங்களில் அவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள். இதையடுத்து, இன்றைய நவீன காலக்கட்டத்தில் நாம் சமையலறை கட்டும் போதே நமக்கு தேவையான வசதியில் பாத்திரம் கழுவுவதற்கு சிங் வைத்துவிடுகிறோம். இந்த சிங்கானது பல்வேறு தொழில்நுட்பத்தில் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.நமக்கு வசதியாக காய்கறிகள், இறைச்சிகள் போன்றவற்றை நாம் சமையலறையில் இருக்கும் சிங்கில் வைத்து கழுவுகிறோம். இதனால் குறிப்பிட்ட நேரம் வரை அந்த மாமிசத்தின் வாடை நமது வீட்டில் உலா வந்து கொண்டே இருக்கும். சிங்கை நீங்கள் என்னதான் சோப்பு, லிக்யூட் வைத்து கழுவினாலும் இந்த வாடை குறிப்பிட்ட நேரம் வரை இருக்கத் தான் செய்யும். இது சமையலறையில் இருக்கும் நம்மை மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் அனைவரையும் பாதிக்கக் கூடும்.சிம்பிள் டிப்ஸ்இந்த வாடையை ஒரே ஒரு காபி தூளால் சரி செய்யலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆமாம், சிங்கில் ஏற்படும் மாமிசகளின் வாடைகளை எப்படி போக்கலாம் என்ற சிம்பிள் டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.  A post shared by gomathy (@gomus.lifestyle)செய்முறைஒரு கிண்னத்தில் சிறிதளவு காபி தூள், கொஞ்சம் பாத்திரம் கழுவும் லிக்யூட், சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் மட்டுமே சேர்க்க வேண்டும். அதிகப்படியான தண்ணீர் சேர்தால் மாமிசத்தின் வாடை போகாது. இந்த கலவையை நமது சிங்கில் ஸ்க்ரப்பர் வைத்து நன்றாக தேய்த்துவிட்டு தண்ணீர் ஊற்றி கழுவினால் போதும் மாமிசத்தின் வாடை சட்டென காணாமல் போய்பிடும் இந்த எளிய டிப்ஸை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன