விளையாட்டு
IND W vs PAK W LIVE Score: வெற்றிப் பயணத்தை தொடருமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று மோதல்
IND W vs PAK W LIVE Score: வெற்றிப் பயணத்தை தொடருமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று மோதல்
IND W vs PAK W World Cup 2025, India Women vs Pakistan Women Live Score Updates Today: 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.இந்நிலையில், இந்தத் தொடரில் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 59 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியில் களமிறங்கும். மறுபுறம், பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாத்தில் வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்தது. 129 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான் தவறுகளை களைந்து சரிவில் இருந்து மீண்டு வர முயற்சிக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
