சினிமா
ரஜினி சாரை சந்தித்தது கோவிலுக்குச் சென்ற உணர்வை கொடுத்தது.. ரிஷப்ஷெட்டி பகீர்.!
ரஜினி சாரை சந்தித்தது கோவிலுக்குச் சென்ற உணர்வை கொடுத்தது.. ரிஷப்ஷெட்டி பகீர்.!
இந்திய திரையுலகில் சிறந்த நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை, சமீபத்தில் ‘காந்தாரா’ புகழ் ரிஷப்ஷெட்டி சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பின் அனுபவம் குறித்து ரிஷப்ஷெட்டி சமூக வலைத்தளங்களில் அளித்த கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவியுள்ளன.”ரஜினி சாரை சந்தித்தது ஒரு கோவிலுக்குச் சென்ற உணர்வு மாதிரி இருந்தது. அவர் என்னை வாழ்த்திய விதம், காட்டிய அன்பும் பாராட்டும், ஒரு பெரியவரின் உண்மையான பெருமையை காட்டுகிறது,” என்று நடிகர் மற்றும் இயக்குநரான ரிஷப்ஷெட்டி கூறியுள்ளார்.தனது “காந்தாரா” படம் மூலம் இந்தியாவின் கலாச்சாரம், புராணங்கள் மற்றும் மதத்தை உணர்ச்சிபூர்வமாகக் கூறியதற்காக பெரும் பாராட்டு பெற்றவர் ரிஷப்ஷெட்டி. அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.ஆனால், ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்து நேரில் பாராட்டு பெறுவது என்பது, வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணம் என அவர் கூறுகிறார்.ரிஷப்ஷெட்டியின் இந்த உருக்கமான பேச்சு சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவி வருகிறது. ரசிகர்கள் இருவரின் புகைப்படங்களைப் பகிர்ந்து, “திரை உலகின் இரண்டு மாபெரும் நடிகர்கள் ஒன்றாக வந்த நாள்” எனக் குறிப்பிடுகிறார்கள்.
