Connect with us

சினிமா

அஜித்குமாரை பாராட்டித் தள்ளிய துணை முதலமைச்சர்.. இதன் பின்னணி என்ன தெரியுமா.?

Published

on

Loading

அஜித்குமாரை பாராட்டித் தள்ளிய துணை முதலமைச்சர்.. இதன் பின்னணி என்ன தெரியுமா.?

இந்திய சினிமா உலகில் மட்டுமல்லாது, மோட்டார் ரேஸிங் எனும் வேக விளையாட்டிலும் தனது தனித்தன்மையை நிரூபித்துள்ள நடிகர் அஜித் குமார், தனது ரேஸிங் அணியுடன் சேர்ந்து 24H ஐரோப்பிய சாம்பியன் ஷிப் கார் பந்தயத்தில் மூன்றாம் இடத்தை கைப்பற்றி சர்வதேச மட்டத்தில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திருந்தார்.இந்த செய்தி வெளியாகியவுடனேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது. இந்தியாவுக்காக பங்கேற்ற அணிகளில் அஜித் குமாரின் அணி Top 3 இடம்பிடித்து சாதனை படைத்தது திறமையால் சாதிக்கப்பட்ட வெற்றி என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.அஜித் குமார் நடிகராக பிரபலமானதற்குப் பிறகும், அவர் தனது உண்மையான விருப்பமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. F2, மற்றும் உலக அளவிலான பல்வேறு ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்ற அனுபவம் தற்போது மீண்டும் சாதனையாக்கமாக மாறியுள்ளது.அஜித் குமார் மற்றும் அவரது அணியின் இந்த சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாட்டின் துணை முதல்வரும், நடிகருமான திரு. உதயநிதி ஸ்டாலின், சமூக வலைத்தளங்களில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.”24H ஐரோப்பிய சாம்பியன் ஷிப் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்த செய்தி அறிந்து பெருமை கொண்டேன். சர்வதேச அளவில் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் அஜித் குமார் மற்றும் அவரது அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்த பாராட்டு பதிவுக்கு இணையத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகின்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகர் சர்வதேச வேக பந்தயத்தில் சிறந்து விளங்குவது, மாநில விளையாட்டு வளர்ச்சிக்கும், இளைஞர்களுக்குமான உந்துதலாகவும் இருக்கிறது என்பதனை அஜித்குமார் நிரூபித்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன