Connect with us

இந்தியா

இந்திய வான் பாதுகாப்புக்கு ‘மிஷன் சுதர்சன சக்கரம்’: 7000 ரேடார்கள், செயற்கைக்கோள்கள், லேசர் ஆயுதங்களுடன் கவசம்!

Published

on

Over-the-horizon radars

Loading

இந்திய வான் பாதுகாப்புக்கு ‘மிஷன் சுதர்சன சக்கரம்’: 7000 ரேடார்கள், செயற்கைக்கோள்கள், லேசர் ஆயுதங்களுடன் கவசம்!

இந்தியா முழுவதும் வான்வெளியில் அச்சுறுத்தலையும் கண்காணிக்கவும், கண்டறியவும், அழிக்கவும் கூடிய தேசிய வான் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும் நோக்கத்துடன், மத்திய அரசின் ‘மிஷன் சுதர்சன சக்கரம்’ திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சுமார் 6,000 முதல் 7,000 ரேடார்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் இயக்கு ஆற்றல் ஆயுதங்களை ஒரே ஒருங்கிணைந்த பிணையத்தில் இணைக்கும் என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.இத்திட்டத்தில் முப்படைகள், துணை ராணுவப் படைகள், பாதுகாப்புத் துறை பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு பங்கேற்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த அமைப்பின்கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய மூலோபாய இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பல அடுக்கு வான் பாதுகாப்பு கவசம், நாட்டின் முக்கியமான இராணுவ அமைப்புகள், மூலோபாய சொத்துக்கள் மட்டுமின்றி, முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் மையங்கள் முழுவதும் எதிரி அச்சுறுத்தல்களைக் கண்காணித்து அழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவிண்வெளி கண்காணிப்பு: இந்த மிஷனுக்கு வலுசேர்க்கும் வகையில், 2030க்குள் 52 புதிய கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவை, சுதர்சன சக்கரத்தின் ரேடார்களுடன் இணைக்கப்பட்டு, எதிரி விமானங்கள், டிரோன்கள் அல்லது ஏவுகணைகளைக் கண்காணிக்கும். எதிரிப் பகுதியை ஆழமாகப் பார்க்கக்கூடிய தொடுவானுக்கு அப்பால் உள்ள ரேடார்கள் (Over-the-Horizon – OTH) உட்பட பல ரேடார் அமைப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு இந்த கவசத்துடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.இயக்கு ஆற்றல் ஆயுதங்கள் (DEWs): உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, உயர் சக்தி லேசர்களைப் பயன்படுத்தி இலக்குகளை அழிக்கும் இயக்கு ஆற்றல் ஆயுதங்களும் இந்த பிணையத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இது மூலோபாய மற்றும் தந்திரோபாய மட்டங்களில் வான் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும்.பல்-அடுக்கு பாதுகாப்பு: செயற்கைக்கோள்கள், OTH ரேடார்கள், DEWs ஆகியவை நீண்ட மற்றும் நடுத்தர தூர ஏவுகணை அமைப்புகள், ஆண்டி-ட்ரோன் தொழில்நுட்பங்கள், வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, பரந்த அளவிலான அச்சுறுத்தல்களுக்கு எதிராக அடுக்கு பாதுகாப்பை உருவாக்கும்.பிரதமர் மோடி, சுதந்திர தினத்தன்று இந்த ‘மிஷன் சுதர்சன சக்கரம்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதாக அறிவித்து, இது இந்தியாவையும் அதன் முக்கிய அமைப்புகளையும் பாதுகாக்கப் பயன்படும் விரிவான பிணைய அமைப்பு என்று கூறினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதை இந்தியாவின் “சுய-பாதுகாப்புக்கான உறுதிப்பாடு” என்று விவரித்தார்.பாதுகாப்பு படை தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், இந்த மிஷனை இந்தியாவின் Iron Dome அல்லது Golden Dome போன்றது என்று விவரித்தார். இந்த மிஷன் கேடயமாகவும், வாளாகவும் செயல்பட்டு, எதிரி வான் அச்சுறுத்தல்களைக் கண்டறியும், கையகப்படுத்தும் மற்றும் அழிக்கும் உள்கட்டமைப்பை உருவாக்கும் என்று அவர் கூறினார்.”பெரிய அளவிலான டேட்டா நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். இதற்காக ஏ.ஐ., மேம்பட்ட கணக்கீடு, டேட்டா பகுப்பாய்வு, பிக் டேட்டா, LLMகள் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்கள் ஆகியவை அத்தியாவசியமாக இருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஏற்கனவே ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த மாதம், எதிரி விமானங்களைத் தடுக்கும் QRSAM ஏவுகணைகள், நெருக்கமான அச்சுறுத்தல்களுக்கான VSHORADS ஏவுகணைகள் மற்றும் ஒரு 5 கிலோவாட் லேசர் ஆகியவற்றை இணைக்கும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை (IADWS) DRDO வெற்றிகரமாக சோதித்தது. இந்த உள்நாட்டு அமைப்பு சுதர்சன சக்கர கவசத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன