சினிமா
விஜய் சேதுபதி மகன் STR ரசிகனா? விழா மேடையில் பிரபலம் சொன்ன உண்மை..!
விஜய் சேதுபதி மகன் STR ரசிகனா? விழா மேடையில் பிரபலம் சொன்ன உண்மை..!
தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 9 தொடக்க நிகழ்ச்சியில், பிரபல நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு ஒரு ரசிக்கத்தக்க ஹைலைட் அளித்தார். இவர் கூறிய ஒரு நகைச்சுவையான, அதே சமயம் மனம் தொட்ட சம்பவம், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, தனது வாழ்க்கை மற்றும் குடும்பத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது, “என் பையன் அடிக்கடி சொல்வான், ‘நான் STR-ஓட பெரிய ரசிகன்!’ அப்போ நான் அவன்கிட்ட கேட்பேன், ‘ஏன்டா, நான் ஒரு நடிகன்னு வீட்ட இருக்கன் அது தெரியலையா?’”இந்த உரையாடல் மிகவே பரவலாக சிரிப்பையும், அன்பையும் ஏற்படுத்தியது. STR மற்றும் விஜய் சேதுபதி இருவருமே தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்புத் திறன் கொண்டவர்கள். இப்போது விஜய் சேதுபதியின் சொந்த மகனே STR ரசிகன் என சொல்லுவதால், இது ரசிகர்களிடம் மேலும் ஈர்ப்பாக உள்ளது.
