Connect with us

சினிமா

கரூர்ல 41 பேர் செத்துப் போயிட்டாங்க.. பிக் பாஸ் போட்டியாளருக்கு ஆதரவு திரட்டும் தவெகவினர்

Published

on

Loading

கரூர்ல 41 பேர் செத்துப் போயிட்டாங்க.. பிக் பாஸ் போட்டியாளருக்கு ஆதரவு திரட்டும் தவெகவினர்

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 அக்டோபர் 5 ஆம் தேதி விஜய் சேதுபதி தலைமையில் தொடங்கியுள்ளது.இந்நிகழ்ச்சியில். வாட்டர்லெமன் சுதாகர், அரோரா சின்க்ளேர், ஃப்ரெடிக் ஜான், விஜே பார்வதி, துஷார், கனி திரு, சபரிநாதன், பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன் ராஜ் தேவ், சிபிஷா குமார், திருநங்கை மாடல் அப்சரா சிஜே, விக்காஷ் விக்ரம், நந்தினி ஆர், கம்ருதீன், கலையரசன் உள்ளிட்ட 20 போட்டியாளர் பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் நிழைந்துள்ளனர்.பிக்பாஸ் 9ல் சுபி என்று பிரபலமான மீனவ பெண் சுபிக்‌ஷா, விலாக் மூலம் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட்டானவர். பூர்விகா, சத்யா என பல கடைகளுக்கு பிரமோஷன் செய்திருக்கிறார் சுபி. விஜய் டிவியின் ஊ சொல்றியா ஊஊ சொல்றியா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார் சுபி.இந்நிலையில், அப்பாவுடன் கடலில் சிறு வயதில் இருந்தே அடம்பிடித்து மீன் பிடிக்கச்சென்ற கதையை விஜய் சேதிபதியிடம் கூறி அவர் மனதையும் கவர்ந்தார். மீனவ பொண்ணு என்பதை தாண்டி சுபி தவெக கட்சியின் தொண்டரும் விஜய்யின் தீவிர ரசிகையுமாவார். அவரை தற்போது தவெக தொண்டர்கள் பிரமோட் செய்து வருவது தான் நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.ஒருவர் கரூரில் 41 பேர் செத்துப்போயிருக்காங்க, இங்க இந்த தவெகவினர் என்ன பண்றாங்க பாருங்க என்று பிக்பாஸ் மீனவ பொண்ணுக்கு சப்போர்ட் செய்பவர்களை வெளுத்து வாங்கி பேசியிருக்கிறார்.மேலும் பலர் இந்தம்மாவும் இன்ஃப்ளுயன்சர் தானா? இந்த சீசனில் எல்லாமே இன்ஃப்ளுயன்சர்களாக இருக்காங்களே என்று பிக்பாஸை கலாய்த்தும் வருகிறார்கள்.தவெக கட்சியை சேர்ந்தவங்களா? என்பதையெல்லாம் விட்டு விடுங்க, அவங்க பிக் பாஸ் வீட்டில் எப்படி விளையாடுறாங்கனு பாருங்க, அவங்களோட திறமை, நடவடிக்கையை வைத்து அவங்களுக்கு சப்போர்ட் செய்வதும், செய்யாததும் மக்களோட முடிவு என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன