Connect with us

பொழுதுபோக்கு

அனாதை இல்லத்தில் தொடங்கிய வாழ்க்கை… ‘ஆடல் பாடல்’ நிகழ்ச்சியின் நாயாகி; பிக் பாஸ் ‘ரம்யா ஜோ’ பின்னணி!

Published

on

ramya joe

Loading

அனாதை இல்லத்தில் தொடங்கிய வாழ்க்கை… ‘ஆடல் பாடல்’ நிகழ்ச்சியின் நாயாகி; பிக் பாஸ் ‘ரம்யா ஜோ’ பின்னணி!

தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் ‘பிக்பாஸ்’ என்ற ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7-வது சீசனுடன் கமல்ஹாசன் விலகிய நிலையில், 8-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அவர் தொகுத்து வழங்குவது குறித்து பல்வேறு  விமர்சனங்கள் எழுந்தாலும் பலர் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியின் சீசன் 9 மிக பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனை விஜய் சேதுபதியே மீண்டும் தொகுத்து வழங்குகிறார். போட்டியின் தொடக்க நாளான நேற்று (அக். 5) 20 போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.  போட்டியாளர்களாக வாட்டமெலன் ஸ்டார் திவாகர், அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார் ஜெயபிரகாஷ், கனி திரு, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன்,  சுபிக்‌ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், அகோரி கலையரசன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி போடியாளர் ரம்யா ஜோவை வரவேற்று அவரது வாழ்க்கை குறித்து கேட்ட நிலையில் அவர் கண்ணீருடன் அதனை பகிர்ந்து கொண்டார். அதாவாது, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடனக் கலைஞரான ரம்யா ஆசிரமத்தில் தனித்து வளர்ந்து, நடிகையாக பலரை சம்பாதிக்க வேண்டும் என்ற கனவுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இவரின் உண்மையான பெயர் ஸ்டெல்லா. மைசூரைச் சேர்ந்த இவர், படிக்க வைக்க நபர்கள் இல்லாததால் ஆசிரமத்தில் வளர்ந்துள்ளார். தனது பெற்றோர்கள் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்ததால், 2 வயது முதலே தனது சகோதரிகளுடன் ஆசிரமத்தில் வளர்ந்தவர்.படிக்க போதிய பொருளாதார சூழல் இல்லாததால், பணத்திற்காக ஆடல், பாடல் நடன நிகழ்ச்சிகளுக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த அனுபவத்தால் சினிமா மீது கனவுகளை வளர்த்துக்கொண்டார். அதனை நோக்கிய முயற்சியாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.ஆசிரமத்தில் தனியாக வளர்ந்ததால், பிக் பாஸ் வீட்டில் 10 – 15 பேரும் அமர்ந்து சாப்பிட்டு ஜாலியாக இருக்க  வேண்டும் என்பதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு தான் வந்திருப்பது பெரிய அக்காவுக்குப் பிடிக்கவில்லை என்றும், ஆனால் சின்ன அக்கா மட்டுமே தனக்குத் துணையாகவும், ஆதரவாகவும் இருந்தார் என்றும் அவர் மனம் திறந்துள்ளார். ஒரு கலைஞராக அங்கீகாரம் பெறவும், சமூகத்தில் ஒரு இடத்தை அடையவும் அவர் படும் வேதனைகள், பார்வையாளர்களின் மனதை வருடின.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன