Connect with us

இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு: தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர்

Published

on

Chief Justice BR Gavai

Loading

உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு: தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர்

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, 71 வயதான ஒரு வழக்கறிஞர், திங்கள்கிழமை காலை உச்ச நீதிமன்றத்துக்குள் காலணியை வீசியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்திற்கு விரைந்து வந்துள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ராகேஷ் கிஷோர் என அடையாளம் காணப்பட்ட அந்த வழக்கறிஞர், காலை சுமார் 11:35 மணியளவில், நீதிமன்ற எண் 1-ல் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தபோது, தனது ஸ்போர்ட்ஸ் காலணியைக் கழற்றி நீதிபதி கவாய் மீது வீசி உள்ளார். மூத்த காவல்துறை அதிகாரி, “அவரைப் பாதுகாப்புப் பணியாளர்கள் பிடித்து, உச்ச நீதிமன்றத்தின் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அவர் மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர். மேலும், அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் (Supreme Court Bar Association) பதிவு செய்த உறுப்பினராவார்,” என்று கூறினார்.முதற்கட்ட விசாரணையில், மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ கோவில் வளாகத்தில் உள்ள விஷ்ணு சிலை restoration தொடர்பான வழக்கை அண்மையில் விசாரித்தபோது, தலைமை நீதிபதி கவாய் தெரிவித்த கருத்துக்களால் அந்த வழக்கறிஞர் மனவருத்தத்தில் இருந்தது தெரியவந்து உள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கதலைமை நீதிபதி கவாய் சலனப்படாமல், வழக்கறிஞர்களை தொடர்ந்து வழக்குகளை நடத்தும்படி கேட்டுக்கொண்டார். அந்நபர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும்போது, “சநாதன தர்மத்தின் அவமானத்தை இந்துஸ்தான் சகிக்காது (Sanatan dharma ka apmaan nahi sahega Hindustan)” என்று கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.”தற்போது, டெல்லி காவல்துறையும் உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலும் (Registrar General) ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், டெல்லி மாவட்டம் (New Delhi District) இந்த வழக்கை விசாரித்து வருகிறது,” என்று அதிகாரி தெரிவித்தார். தலைமை நீதிபதி கவாய், டெல்லி காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவால் வழங்கப்பட்ட ‘இசட் பிளஸ்’ (Z plus) பாதுகாப்பில் உள்ளார்.நீதிமன்றத்தில் இருந்த ஒரு வழக்கறிஞர், ஒரு வழக்கறிஞர் அங்கி அணிந்திருந்த நபர் தலைமை நீதிபதி கவாய் மீது எதையோ வீசியதாகத் தெரிவித்தார். அந்த நபர் தலைமை நீதிபதி மீது காலணியை வீசினார் என்று பிறகு பாதுகாப்புப் பணியாளர்கள் தன்னிடம் தெரிவித்தனர் என்றும் அவர் கூறினார். வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, அந்த நபர் சில கோஷங்களை எழுப்பியதையும் அவர் கேட்டதாகக் கூறினார்.நீதியரசர் கே. வினோத் சந்திரன் உடன் 2 நீதிபதிகள் அமர்வுக்குத் தலைமை தாங்கிய தலைமை நீதிபதி கவாய், செப்.16 அன்று, கஜுராஹோ கோவில் வளாகத்தில் உள்ள ஜாவரி கோவிலில் (Javari Temple) சிதைக்கப்பட்ட 7 அடி உயர விஷ்ணு சிலையை மீண்டும் அமைக்குமாறு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தபோது இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.”இது முற்றிலும் விளம்பர நோக்குடைய பொதுநல வழக்கு. நீங்களே அந்த தெய்வத்திடம் சென்று ஏதாவது செய்யும்படி கேளுங்கள். நீங்க விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொன்னால், பிரார்த்தனை செய்து தியானம் செய்யுங்கள்,” என்று தலைமை நீதிபதி கவாய் மனுதாரரிடம் கூறினார்.பின்னர், தலைமை நீதிபதி கவாய் “எல்லா மதங்களையும் மதிப்பதாக”க் கூறி, தனது கருத்துக்கள் இந்தியத் தொல்லியல் துறையின் (Archaeological Survey of India – ASI) பராமரிப்பு அதிகார வரம்புக்கு உட்பட்டது என்ற பின்னணியில் தெரிவிக்கப்பட்டன என்று விளக்கமளித்தார். “நான் எல்லா மதங்களையும் நம்புகிறேன், எல்லா மதங்களையும் மதிக்கிறேன்,” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன