Connect with us

தொழில்நுட்பம்

கூகிள் ஹோம் ஆஃப்பில் ஜெமினி ஏ.ஐ… வீட்டு வேலைகளை இனி வாயாலேயே சொல்லலாம்!

Published

on

Gemini for Home

Loading

கூகிள் ஹோம் ஆஃப்பில் ஜெமினி ஏ.ஐ… வீட்டு வேலைகளை இனி வாயாலேயே சொல்லலாம்!

உங்க ஸ்மார்ட்ஹோம் சாதனங்களை கட்டுப்படுத்த இனி நீங்க பேசும் விதம் முற்றிலும் மாறப்போகிறது. கூகுள் நிறுவனம் அதன் கூகுள் ஹோம் ஆஃப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதில், பழைய கூகுள் அசிஸ்டெண்ட்க்கு பதிலாகப் புதிய மற்றும் மிக சக்திவாய்ந்த ஜெமினி ஏ.ஐ. இடம்பெறுகிறது. இந்த அப்டேட் உங்க ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை நிர்வகிப்பதை மிக எளிமையாகவும், அறிவார்ந்ததாகவும், உரையாடல் தன்மையுடனும் மாற்றும் என கூகுள் உறுதி அளித்துள்ளது. புதிய ஆப் வடிவமைப்பு முதல், பிரத்யேக ஏ.ஐ. அம்சங்கள் வரை, ஜெமினி பார் ஹோம் மூலம் கூகுள் கொண்டு வரும் 5 பிரம்மாண்ட மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்.கூகுள் ஹோமில் ஜெமினி: 1. ஆஃப்பின் டிசைன் மொத்தமாக மாற்றம் (Redesigned Google Home App):கூகுள் ஹோம் ஆஃப்பின் இண்டர்பேஸ் (UI) மிக புதுமையாகவும், வேகமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதில் ஹோம் டேப், ஆக்டிவிட்டி டேப் மற்றும் ஆட்டோமேஷன் டேப் என 3 தனித்தனி பிரிவுகள் (Three-tab layout) சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், உங்க சாதனங்களைக் கட்டுப்படுத்துவது, செயல்பாடுகளைக் கண்காணிப்பது, மற்றும் ஆட்டோமேஷன் செய்வது போன்றவற்றை எளிதாக நிர்வகிக்கலாம்.2. கூகுள் அசிஸ்டெண்டுக்கு நிரந்தர ஓய்வு:இதுதான் மிக குறிப்பிடத்தக்க மாற்றம். இனிமேல், கூகுள் ஹோம் ஆப்பின் ஆதரவு சாதனங்களில் அசிஸ்டெண்ட் இருக்காது. ஸ்மார்ட் ஹோம் செயல்பாடுகளை நிர்வகிக்கவும், இயல்பாக உரையாடவும் பயனர்கள் நேரடியாக ஜெமினி ஏ.ஐ. உடன் மட்டுமே உரையாட வேண்டும். ஒரு செயற்கை நுண்ணறிவுடன் நீங்க பேசும் அனுபவத்தை இது முழுவதுமாக மாற்றியமைக்கும்.3. சூழல் விழிப்புணர்வுடன் பேசும் ஜெமினி (Contextual Awareness):ஜெமினி ஏ.ஐ. ஆனது வெறும் கட்டளைகளுக்குப் பதில் சொல்வதுடன் நின்றுவிடாமல், நீங்க இருக்கும் சூழலையும், நேரத்தையும் புரிந்துகொண்டு பதிலளிக்கும். “ரியல் டைம்” அதாவது நிகழ்நேரத்தில் உங்களோடு பின்னும் முன்னும் உரையாடலை (Real-time back-and-forth conversation) இது மேற்கொள்ளும். சமீபத்திய கட்டளைகள், அன்றைய நேரம் மற்றும் உங்க மற்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களின் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மிகவும் இயல்பான பதில்களை Gemini வழங்கும்.4. ஸ்மார்ட் கேமராக்களில் கூடுதல் புத்திசாலித்தனம்:வீட்டுக் கண்காணிப்பு இப்போது இன்னும் பாதுகாப்பாகிறது. ஜெமினியுடன் வரும் மேம்பட்ட கேமராக்களால், அசைவு, நபர் மற்றும் பார்சல் போன்றவற்றைக் கண்டறிந்து ஸ்மார்ட் எச்சரிக்கைகள் (Smart Alerts) அனுப்பப்படும். மேலும், நீண்ட வீடியோக்களைச் சுருக்கிக் காட்டும் ‘Home Brief’ அம்சமும் உள்ளது. இதைப் பார்த்தவுடன், அதைப் பற்றிய கூடுதல் கேள்விகளைப் பயனர்கள் Gemini-யிடம் கேட்கலாம்.5. ஒரு கட்டளையிலேயே ஆட்டோமேஷன் தயார் (Task Automations Made Easy):ஆட்டோமேஷன் உருவாக்குவது இனிமேல் மிக மிக எளிது. நீங்கள் வெறுமனே, “தினமும் சூரியன் மறையும் நேரத்தில் வீட்டின் முன் விளக்குகளை ஆன் செய்து, முன் கதவைப் பூட்டுவதற்கான ஆட்டோமேஷனை உருவாக்கு” என்று ஒரு வாய்ஸ் கட்டளையை வழங்கினால் போதும். ஜெமினி உடனடியாக அதற்கான ரொட்டீனை (Routine) தானாகவே உருவாக்கி, உங்க பணியை எளிதாக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன