சினிமா
சனாதன தர்மத்தை சிம்பிளா காட்டுற தலைவா!! கவனத்தை ஈர்க்கும் ரஜினிகாந்த்..
சனாதன தர்மத்தை சிம்பிளா காட்டுற தலைவா!! கவனத்தை ஈர்க்கும் ரஜினிகாந்த்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். 2026 ஜூன் மாதம் இப்படம் ரிலீஸ்யாகும் என்று ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருந்தார்.எப்போது ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசிய சில கருத்துக்கள், வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும். அந்தவகையில், ரஜினிகாந்த் சனாதன தர்மத்தை பின்பற்றுவதாக பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் வினோஜ் பி செல்வம் சமூகவலைத்தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.தற்போது ஆன்மீகப்பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த், வெள்ளை வேட்டி மற்றும் மேல்துண்டு போட்டுக்கொண்டு எளிமையாக வாழை இலையில் உணவு சாப்பிட்டுள்ளார்.[C3YSNHஅந்த புகைப்படத்தை பகிர்ந்து, சில நடிகர்களுக்கு இந்து மதத்தை கேலி செய்வதும் தாக்குவதும் ஒரு ஃபேஷனாக இருக்கும் இம்மாநிலத்தில், ஒரு சூப்பர் ஸ்டார் எளிமையாக, பணிவாக, உண்மையாக இருக்கிறார்.சனாதன தர்மத்தின் பாதையை பின்பற்றி, தன் பக்தியை பெருமையுடன் வெளிப்படுத்துகிறார், சூப்பர் தலைவா என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் ரஜினிகாந்தின் எளிமையை புகழ்ந்து வருகிறார்கள்.
