Connect with us

டி.வி

இது BIGG BOSS இல்ல.. மிட் நைட் மசாலா.. ராத்திரி 11 மணிக்கு மேல்.? கூல் சுரேஷ் ஓபன் டாக்

Published

on

Loading

இது BIGG BOSS இல்ல.. மிட் நைட் மசாலா.. ராத்திரி 11 மணிக்கு மேல்.? கூல் சுரேஷ் ஓபன் டாக்

பிரபல காமெடி நடிகரான கூல் சுரேஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அதன் பின்பு இவர் ஓரிரு படங்களில் கமிட் ஆனார்.டிடிஎப் வாசன் நடிப்பில் உருவாக இருந்த மஞ்சள் வீரன் படத்தில் இருந்து அவர் விலகிய பிறகு அந்த படத்திற்கு கதாநாயகனாக கூல் சுரேஷ் கமிட் ஆனார். அதில் இரண்டு கதாநாயகிகள் என கூறப்பட்டது. இந்த படத்திற்கான போஸ்டரும் வெளியானது.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கூல் சுரேஷ் தனது கருத்தை அப்படியே முன் வைப்பார். சமீபத்தில் தான் ஸ்டாலினுக்கும் ஜால்ரா அடிப்பேன், விஜய்க்கும் ஜால்ரா அடிப்பேன், யார் வந்தாலும் ஜால்ரா அடிப்பேன் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில், பட பூஜை ஒன்றின் விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் பற்றி கேட்கப்பட்டது.  அதற்கு வாந்தி எடுத்த கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றியுள்ளார்.அதன்படி அவர் கூறுகையில், 2026 ஆம் ஆண்டு யார் முதல்வராக வந்தாலும், ஏன் நானே முதல்வராக வந்தாலும் முதலில் செய்ய வேண்டியது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை இல்லாமல் செய்வதுதான்.நானும் அந்த நிகழ்ச்சிக்கு போய் வந்தேன். ஆனால் கடந்த இரண்டு சீசன்களாகவே அரைகுறையாக ஆடை அணிபவர்கள்,  மற்றவர்களை மதிக்காதவர்கள், இரட்டை வார்த்தை பேசுபவர்களை பிக் பாஸ்க்குள் அனுமதிக்கின்றார்கள்.  இது மிட் நைட் மசாலா..  ராத்திரி 11 மணிக்கு மேல் என்ன நடக்குமோ அதுதான் அங்கு நடக்கின்றது..இதற்கு முன்பு இடம்பெற்ற சீசன்களை குடும்பமாக இருந்து பார்க்கக் கூடிய வகையில் இருந்தது. ஆனால் இப்போது திறமையானவர்கள் வெளியே இருக்கின்றார்கள். திறமை அற்றவர்களை உள்ளே சேர்க்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன