இலங்கை
கனடாவில் தம்பதியினரை தாக்கிய பனிக்கரடி… மனைவியை காப்பாற்றிய கணவன்!

கனடாவில் தம்பதியினரை தாக்கிய பனிக்கரடி… மனைவியை காப்பாற்றிய கணவன்!
கனடாவில் உள்ள போர்ட் செவன் பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினர் தங்கள் வளர்ப்பு நாய்களை தேடி வீட்டின் வெளியே நடந்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த பனிக்கரடி ஒன்று பெண் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.
இதன்போது அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர், கரடி மீது பாய்ந்து தனது மனைவியை மீட்க போராடினார்.
அப்போது கரடி அவரை கடித்து காயப்படுத்தியது. இதில் அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டது.
இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த
பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுடவும், கரடி அங்கிருந்து தப்பி காட்டுக்குள் ஓடியுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த தம்பதியினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.