டி.வி
ஆக்டரா மட்டும் ஏத்துக்கவே மாட்டேன்… திவாகரை குறிவைத்து தாக்கிய Fj..!
ஆக்டரா மட்டும் ஏத்துக்கவே மாட்டேன்… திவாகரை குறிவைத்து தாக்கிய Fj..!
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த Bigg Boss Tamil Season 9 கடந்த அக்டோபர் 5ம் தேதி ஆரம்பமாகியிருந்தது. இந்நிகழ்ச்சியானது தினந்தோறும் நிகழும் நிஜமான உரையாடல்களால் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்ற ஒரு உணர்ச்சி மிகுந்த உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாடகர் FJ மற்றும் திவாகர் இடையே நிகழ்ந்த இந்த உரையாடலில் FJ திவாகரின் வாழ்க்கைப் பயணத்தை பாராட்டிய பிறகு, அவரது “ஆக்டிங்” விஷயத்தில் சொன்ன கருத்து பல தரப்புகளில் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.FJ, பிக்பாஸ் வீட்டிற்குள் இசை மற்றும் நகைச்சுவையின் மூலம் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். அத்தகைய Fj திவாகரைப் பார்த்து, “உங்க கதை ரொம்ப inspiring-ஆ இருந்திச்சு… டாக்டர்ன்னு சொன்னீங்க. தமிழ் மீடியம்ல படிச்சு இங்கிலிஷ் எல்லாம் கத்துக்கிட்டேன்னு சொன்னீங்க.. சூப்பரா இருந்தது. உங்களை பெரிய டாக்டரா ஏத்துக்கிறேன்…ஆனா ஆக்டரா மட்டும் ஏத்துக்கவே மாட்டேன்.!” என்று கூறியுள்ளார்.இந்த ஒரே வரி, ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது திவாகரின் நடிப்புத்திறனை சோதிப்பது போல ஒருபக்கம் கருதப்படுவதுடன் மறுபக்கம், FJ தனது நேர்மையான அபிப்பிராயத்தைத் தான் பகிர்ந்தார் எனவும் கூறப்படுகிறது.
