Connect with us

சினிமா

ஏய்..!! நைனா இங்க பாருடா..!! அகோரியை தூக்கி இடுப்பில் அடித்த நந்தினி.! காமெடி வீடியோ இதோ

Published

on

Loading

ஏய்..!! நைனா இங்க பாருடா..!! அகோரியை தூக்கி இடுப்பில் அடித்த நந்தினி.! காமெடி வீடியோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பித்த நாளிலிருந்து சண்டை சச்சரவுக்கு குறைவில்லாமல் நகர்ந்து வருகின்றது. இந்த சீசனில் அதிகளவான சோசியல் மீடியா பிரபலங்கள் பங்கேற்றது, பல விமர்சனங்கள் எழுதுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.அதிலும் குறிப்பாக அகோரி கலையரசன், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அரோரா ஆகியோர் கலந்து கொண்டமை பேசு பொருளாக மாறி உள்ளன.எனினும் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி கூறும் போது,  திவாகரும் தன்னுடைய கதையை சொன்னார். இதனால் சக போட்டியாளர்களும் நீங்க டாக்டரா சூப்பர் ஆன ஆக்டர் என்று சொன்னா நாங்க ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கலாய்த்து பேசியதோடு மன்னிப்பும் கேட்டனர்.அதேபோல கலையரசன்,  தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கப்பு வாங்குவதற்காக வரவில்லை. என் மீது உள்ள நெகட்டிவ் விமர்சனங்களை மாற்றுவதற்கே வந்தேன். நான் அகோரி என்பதால் எனது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றார்கள் இல்லை. எனது குடும்பத்திற்காகத்தான் பிக்பாஸ் வந்தேன் என தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை சச்சரவுகள் ஒரு பக்கம் இருக்க போட்டியாளர்களின் காமெடியும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றது.  அதன்படி நந்தினி கலையரசனை இடுப்பில் அடித்துக் கொண்டு சென்ற வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.அதில் நந்தினியின் இடுப்பில் இருந்த கலையரசன் பிரவீன் ராஜை பார்த்து ஏய் .. நைனா இங்க பாருடா.. என்று சொல்லுகின்றார்.  தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தள பக்கங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன