Connect with us

உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் அமைதித் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு கையெழுத்து; டிரம்ப் அறிவிப்பு!

Published

on

Loading

இஸ்ரேல்-ஹமாஸ் அமைதித் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு கையெழுத்து; டிரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தங்கள் அமைதித் திட்டத்தின், முதற்கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

அதற்கமைய, அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கு திரும்பப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

அனைத்துப் பணயக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஒரு வலிமையான, நீடித்த மற்றும் நிரந்தரமான சமாதானத்திற்கான முதல் படியாக இஸ்ரேல் தமது படைகளை ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிற்குள் விலக்கிக் கொள்ளும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், அர்த்தப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம், காஸாவில் போரை நிறுத்துவதற்கும், குறைந்தது சில பணயக் கைதிகளையும், கைதிகளையும் விடுவிப்பதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால், பணயக் கைதிகள் விடுவிப்பு மற்றும் போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மேலும், இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான இரு வருட காலப்போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன