Connect with us

இந்தியா

’2026 தேர்தலில் மன்னராட்சிக்கு இடமில்லை’ : ஆதவ் அர்ஜூனா

Published

on

Loading

’2026 தேர்தலில் மன்னராட்சிக்கு இடமில்லை’ : ஆதவ் அர்ஜூனா

தமிழகத்தில் 2026 தேர்தலில் மன்னராட்சிக்கு இடமில்லை, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது என அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (டிசம்பர் 6) பேசியுள்ளார்.

சென்னையில் நந்தம்பாக்கத்தில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

Advertisement

தொடர்ந்து நூலை உருவாக்கியவரும், வாய்ஸ் ஆப் காமென் நிறுவனரும், விசிக துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா பேசினார்.

அவர், “குடும்பத்தின் விருப்பத்தைத் தாண்டி எனது தாய் காதலித்தபோது ஜாதி கௌரவத்திற்காக விவசாயி ஒருவரை கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் எனது தாய் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஜாதிக் கொடுமைக்கு நேரிடையான சாட்சியாக நானே நிற்கிறேன். தமிழகத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி எனக்கு பெரியம்மா போன்றவர். எனது தாய்க்கு மிகவும் நெருக்கமான அவர் தான் அன்றைக்கு என்னை ஸ்போர்ட்ஸ் விடுதியில் படிக்க வைத்து, என்னை முழு மனிதனாக உருவாக்கினார்.

சிறுவயதில் நான் ஒரு நக்சலைட் ஆகனும் மாவோயிஸ்ட் ஆகனும் என என்னுடைய பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது வழிகாட்டுதலின் பேரில் பெரியார் மற்றும் அம்பேத்கர் கொள்கைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.

Advertisement

பெரியார் கொள்கைகளை அடிப்படையாக கொண்டே இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியாக அண்ணாவின் தலைமையில் திமுக வெற்றி பெற்றது.

தேர்தல் அரசியலில் அம்பேத்கர் முழுமையாக ஈடுபட்டது கிடையாது. மத பெரும்பான்மை வாதத்தை எதிர்த்த அவர், அரசியல் அமைப்பை உருவாக்கி எல்லோரும் சமம் என்ற நிலைபாட்டை நாட்டில் கொண்டு வந்தார்.

விஜய்க்கு அரசியல், கொள்கைகள் தெரியுமா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால் கொள்கைகளை பேசிய பல கட்சிகள் மேடையில் ஏன் அம்பேத்கரை ஏற்றவில்லை?

Advertisement

2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சராக உருவாக்கப்பட கூடாது. தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை என மக்கள் நினைத்துள்ளனர்.

தமிழகத்தில் இனி கருத்தியல் தலைவர் தான் முதலமைச்சராக வேண்டும். தமிழகத்தில் புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து இருக்கிறார். புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக இந்த மேடை உருவாகி இருக்கிறது.

2011 கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான தலித்துகள் இருக்கிறார்கள். ஆனால் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கோரினால், அதற்கு எதிர்ப்பு வருகிறது.

Advertisement

சாதாரண மனிதன் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூறியபோது, அதற்கு முதல் குரலாக ஒலித்தவர் விஜய் தான்.

இனிமேல் நெஞ்சுக்கு நேராக பேசுவோம். முதுகுக்கு பின்னால் பேச வேண்டாம்” என்று ஆதவ் அர்ஜுனா பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன