Connect with us

வணிகம்

தொழில் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் கடன்… வெறும் ரூ.6.5 லட்சம் கட்டினால் போதும்- அரசு வழங்கும் அதிரடி மானியத் திட்டம்

Published

on

PMEGP scheme Business loan subsidy PMEGP loan Tamil DIC loan application Startup loan India PMEGP subsidy

Loading

தொழில் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் கடன்… வெறும் ரூ.6.5 லட்சம் கட்டினால் போதும்- அரசு வழங்கும் அதிரடி மானியத் திட்டம்

ஒருவர் வங்கியில் ₹10 லட்சம் கடன் வாங்கி, ₹6.5 லட்சம் மட்டுமே திரும்பக் கட்டினால் போதும் என்றால் நம்ப முடிகிறதா? நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும்! அதுதான் மத்திய அரசின் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP). வேலைவாய்ப்பை அதிகரிக்க 2008-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், புதிய தொழில் தொடங்கும் அனைவருக்கும் மிகப்பெரிய மானியத்தை வாரி வழங்குகிறது.மானியத்தில் மெகா சலுகை (Subsidy Up to 35%) வழக்கமாக ஒருவர் வங்கியில் தொழில் கடன் பெற்றால், முழுத் தொகையையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (PMEGP), ஆன்லைன் (MIS) போர்ட்டலில் விண்ணப்பிக்கும்போது, அவருக்கு 15% முதல் 35% வரை மானியம் (Subsidy) கிடைக்கிறது. இதன் காரணமாகவே, ₹10 லட்சம் கடனில், ஒரு குறிப்பிட்ட தொகையை (மானியம்) கழித்து, மீதியை மட்டுமே திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.35% மானியம் யாருக்கு? கடன் தொகை: உற்பத்தித் தொழிலுக்கு ₹50 லட்சம் வரையும், சேவைத் துறைக்கு ₹20 லட்சம் வரையும் கடன் பெறலாம்.யார் விண்ணப்பிக்கலாம்? தகுதி: 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் புதிய தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.கடன் உத்தரவாதம் (பிணையம்): தொழில்முனைவோரை ஊக்குவிக்க, ரூ.10 லட்சம் வரை பிணையம் (Collateral) எதுவும் இல்லாமல் வங்கிக் கடன் வழங்க முடியும். யார் விண்ணப்பிக்கக் கூடாது?:ஏற்கனவே உள்ள தொழிலுக்கு அல்லது நடந்துகொண்டிருக்கும் தொழிலுக்கு இக்கடன் வழங்கப்படாது.ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்தக் கடன் கிடைக்கும்.தனிநபர் அல்லாத நிறுவனங்களான பிரைவேட் லிமிடெட், பார்ட்னர்ஷிப், இந்து கூட்டுக்குடும்பம் (HUF) போன்றவற்றுக்குக் கடன் வழங்கப்படாது. தனிநபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.மிகப்பெரிய வாய்ப்பு: இரண்டாம் கட்டக் கடன் (Second Dose)!முதல் கடனைப் பெற்று, அதனை வெற்றிகரமாக நடத்தி, 3 முதல் 5 ஆண்டுகள் வரை சரியாகக் கட்டி முடித்தவர்கள், தங்கள் தொழிலை மேலும் விரிவாக்கம் செய்ய விரும்பினால், PMEGP-யின் கீழ் ‘இரண்டாம் கட்டக் கடன்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.தொகை: இதில், தொழில்முனைவோர் ரூ.1 கோடி வரை கடன் பெற முடியும்.மானியம்: இந்த இரண்டாம் கட்டக் கடனுக்குக்கூட, 15% முதல் 20% வரை மானியம் கிடைக்கும். (அதாவது ரூ.1 கோடி கடன் பெறுபவருக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அரசு மானியம்!)எங்கே விண்ணப்பிப்பது?புதியதாகத் தொழில் தொடங்க ஆர்வம் உள்ள அனைவரும், தங்கள் பகுதியில் உள்ள வங்கிக் கிளை மேலாளரை அணுகலாம் அல்லது அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியான KVIC (Khadi and Village Industries Commission)-ஐ நாடலாம்.மிகவும் எளிதான வழி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டத் தொழில் மையத்தில் (DIC) உள்ள உதவி மையத்தை (Help Desk) அணுகுவதுதான். இங்கு நீங்கள் அணுகினால், கட்டணம் இன்றி இலவசமாக ஆன்லைனில் விண்ணப்பம் பதிவீடு செய்து தரப்படும்.புதிய தொழில் தொடங்கி, முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உடனடியாக இந்தத் திட்டத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கான முதல் அடியை எடுத்து வைக்கலாம்!குறிப்பு: விண்ணப்பிக்கும்போது, முதலீடு, லாபம், கடன்/வட்டித் திருப்பிச் செலுத்துதல் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கை (Project Report) சமர்ப்பிப்பது அவசியம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன