Connect with us

இந்தியா

Villupuram Flood: ”முக்கிய ஆவணங்கள் மழை நீரில் சேதம்” – திணறும் அரசு அலுவலர்கள்…

Published

on

பள்ளி மாணவர்களின் கல்வி சான்றிதழ் உட்பட அனைத்தும் சேதம் - பொதுமக்கள் அவதி 

Loading

Villupuram Flood: ”முக்கிய ஆவணங்கள் மழை நீரில் சேதம்” – திணறும் அரசு அலுவலர்கள்…

பள்ளி மாணவர்களின் கல்வி சான்றிதழ் உட்பட அனைத்தும் சேதம் – பொதுமக்கள் அவதி 

Advertisement

விழுப்புரத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையை அடுத்து, மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. குடியிருப்புப் பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் பொது மக்களின் கண்ணீரும், அழுகுரலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, விக்கிரவாண்டி, திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம், மயிலம், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர், திருக்கோவிலூர், முகையூர், மணம்பூண்டி, கெடார், காணை, செஞ்சி, மேல்மலையனூர் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=LWhivjuK4IU&list=PLZjYaGp8v2I8VFCEbPzA_Q1pLGmcknXhm&index=13&t=22s&pp=iAQB

Advertisement

குறிப்பாக பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்கள், அரசு அலுவலகங்களின் ஆவணங்கள், பள்ளி நிர்வாகங்களில் உள்ள கணினி போன்ற அனைத்து பொருட்களும் மழை நீரில் நனைந்து சேதமடைந்துள்ளது. இதனை அடுத்து பல பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிர்வாகங்களில் உள்ள அலுவலர்கள் அதனை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன