Connect with us

இலங்கை

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அழிந்துவிடும் ; எலான் மஸ்க் ஆரூடம்

Published

on

Loading

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அழிந்துவிடும் ; எலான் மஸ்க் ஆரூடம்

எக்ஸ் நிறுவன உரிமையாளரும், மிகப்பெரிய தொழிலதிபருமான எலான் மஸ்க், எப்போதும் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்வதில் வல்லவர்.

அவர் அண்மையில், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன என்று ஆரூடம் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

Advertisement

அதற்குக் காரணம் வேறு ஒன்றுமில்லை, சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக வெளியானத் தகவலை மேற்கோள்காட்டியே எலான் மஸ்க் இவ்வாறு கூறியிருந்தார்.

மரியோ நாவ்ஃபால் என்பவர், சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவுக்கு கருத்தளிக்கும் விதமாக எலான் மஸ்க் இந்த கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

எலான் மஸ்க் கூறியிருக்கும் தகவல், உலகின் மேம்பட்ட சமுதாயம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலைப் பற்றியதாகவே உள்ளது.

Advertisement

கடந்த பல பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது பெரிய அளவில் சரிந்துவந்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது வரலாற்றில் இல்லாத அளவுக்கு 0.97 ஆகக் குறைந்துள்ளது. இதுவே 1.0க்கும் குறைவாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது முதல் முறையாகும்.

அதாவது, ஒரு பெண் ஒன்றுக்கும் குறைவான குழந்தைகளையே பெற்றுக்கொள்கிறார்கள் என்றால், பலரும் ஒரு குழந்தை கூட பெறுவதில்லை என்பதாகிறது.

Advertisement

இதனால் சிங்கப்பூரில் வயதானவர்கள் அதிகம் இருப்பர், தொழிலாளர் குறைவாகும், மனித வளம் குறைந்துவிடும்.

இதனால் தொழிற்சாலை முதல் உணவு விநியோகம் வரை அனைத்தும் பாதிக்கும் என்று மரியோ நாவ்ஃபால் பதிவிட்டிருந்தார்.

அதாவது, ஒரு பெண் தனது முதல் குழந்தையைப் பெறும் வயதான 25 – 34 வரை பெரும்பாலும் திருமணமாகாமல் இருப்பதும், 20 வயதில் குழந்தைப் பெறும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும், 1990 முதல் 2005 வரை இவ்வாற குறைவது அதிகரித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

மனித வளத்தின் தேவையை, ரோபோக்கள் நிறைவேற்றும் என்றும் பலரும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன