இந்தியா
கரூர் வழக்கு விசாரணை – உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
கரூர் வழக்கு விசாரணை – உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் முன்னெடுத்த தேர்தல் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் தமிழக வெற்றிக்கழகம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனு நேற்று (10.10) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது இருதரப்பு வாத பிரதிவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு வழக்கு தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு தமிழக அரசு கால அவகாசம் கோரிய நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
