Connect with us

சினிமா

கொலைன்னு போஸ்ட்மார்டம் பண்ணாக்கூட தெரியகூடாதாம்!! விஜய்யின் தந்தை பேச்சு..

Published

on

Loading

கொலைன்னு போஸ்ட்மார்டம் பண்ணாக்கூட தெரியகூடாதாம்!! விஜய்யின் தந்தை பேச்சு..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், கரூரில் பரப்புரை செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விஜய்யை அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.இந்நிலையில், விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர், ராம் அப்துல்லா ஆண்டனி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு படத்தின் முக்கிய காட்சியை பற்றி பேசியுள்ளார்.அதில், தமிழில் பல காதல் படங்கள் வந்துள்ளது, ஆனால் இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் வெளியான காதல் கோட்டை படத்தைப்போல் ஆழமான திரைக்கதையுடன் எந்த படமும் வெளியாகவில்லை.எனக்கு இன்றும் நினைவில் உள்ளது, ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவில் அவரை சந்தித்து விஜய்க்கும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று கேட்டேன், ஆனால், அந்த கொடுப்பினையும் பாக்கியமும் எங்களுக்கு கிடைக்கவில்லை.இப்படத்தினை பார்க்க வேண்டும் என்று படத்தின் டிரைலர் பார்த்ததும் எண்ணத்தை உருவாக்கிவிட்டது. டிரைலரில் ஒரு முக்கியமான விசயம் கொடுத்து உள்ளார்கள், அதில் போஸ்ட்மாடம் செய்தால் கூட கண்டுபிடிக்கக் கூடாது என்று வசனம் உள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, சில நேரங்களில் சொன்னால் தப்பு ஆகிவிடும், ஆனால் டிரைலரில் அப்படி சொல்லியிருப்பது தவறு இல்லை.டிரைலரில் ஒரு சேலஞ்சும் விடுகிறார்கள், அதாவது இந்த கேஸ் முடியுற வரைக்கும் சிரிக்க கூடாது என்பதுதான் அது. இப்போதுள்ள டிரெண்டே சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் பண்ணலாம், போட்ட படத்தை எடுத்துவிடலாம் என்றும் அதேபோல் புதுமுக, இளம் நடிகர்களை வைத்து படம் பண்ணலாம், ஆனால் நடுத்தரத்தில் இருக்கும் நடிகர்களை வைத்து படம் பண்ண யாரும் தயாராக இல்லை.அப்படி நடுத்தர நடிகர்களை வைத்து படம் நடுத்தால், தயாரிப்பாளர், இயக்குநர்கள் காணாமல் போவார்கள். இப்படியான படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் இப்போது இல்லை, பெரிய ஸ்டார்களின் படத்தை தயாரிக்கத்தான் தயாரிப்பாளர்கள் உள்ளார்கள். இந்த படத்தை எடுக்க 2.5 கோடிகளை தயாரிப்பாளர்கள் செலவு செய்கிறார்கள் என்றால் இயக்குநர் மீது அவருக்கு இருந்த நம்பிக்கைக்கு, நன்றி.அந்த நம்பிக்கை தான் வெற்றிப்பெற வைக்கும். மனிதனுக்கு அடைப்படையில் நம்பிக்கை முக்கியம், நாம் ஜெயிப்போம் என்று நினைத்து ஆரம்பித்தால் நிச்சயம் ஜெயிப்போம், வயது, அனுபவம், அறிவு, திறமை இதுவெல்லாம் பிறகு தான், முதலில் நம்பிக்கை வேண்டும், நம்பிக்கை உள்ளவன் தான் ஜெயிப்பான் என்று எஸ் ஏ சந்திரசேகர் பேசியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன